Aran Sei

கான்பூர்: நபியை அவமதித்த பாஜக செய்தித் தொடர்பாளருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – 36 பேரை கைது செய்த உ.பி காவல்துறை

Credit: NDTV

த்தரபிரதேச மாநிலம் கான்பூரில், முஹம்மது நபியை அவமதிக்கும் வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வன்முறைக்கு காரணம் என 36 பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், சம்பவத்தின் போது பதிவான காணொளிகளை வைத்து இதற்கு காரணமானவர்களை செய்து செய்து வருவதாக கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது 3 முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உத்தரபிரதேசம்: வழிபாட்டு தலங்களில் இருந்து 45 ஆயிரத்திற்கும் அதிகமான ஒலிப்பெருக்கிகள் அகற்றம்

வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.

இது குறித்து காவல்துறை ஆணையர் விஜய் சிங் மீனா, “காணொளிகள் அடிப்படையில் மேலும் பலர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்கவும், சட்டம் ஒழங்கை பராமரிக்கவும் நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம்: மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக கூறி வலதுசாரிகளால் தாக்கப்பட்ட இஸ்லாமியர்

கான்பூரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, முகமது நபிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சந்தைகளை மூடக்கோரி இரு குழுக்களைச் சேர்ந்தவர்கள் மோதிக் கொண்டனர் மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கியான்வாபி மசூதி விவகாரம் தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தின் போது நபிகள் குறித்து தவறாக கருத்துக்களை நூபுர் ஷர்மா கூறியிருந்தார்.

இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த காவல்துறையினர் 13 பேர் உள்ளிட்ட 30 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரபிரதேசம்: மகனை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை சுட்டுக் கொன்ற காவல்துறை

100 பேர் கொண்ட கும்பல் திடீரென வீதியில் இறங்கி கோஷமிடத் தொடங்கினர். மற்றொரு குழுவினர் அதை எதிர்த்தனர், அது கல் வீச்சு வரை அதிகரித்தது. அந்த இடத்தில் சுமார் 8 முதல் 10 காவலர்கள் இருந்தனர். அவர்கள் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றனர். கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, 10 நிமிடங்களில் மூத்த அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தேன்”  என்று மீனா தெரிவித்துள்ளார். 

Source: NDTV

கலைஞர் தமிழ்நாட்டின் அரசியல் அச்சாணி | Subavee Latest Speech on Kalaignar Karunanidhi I Aransei

கான்பூர்: நபியை அவமதித்த பாஜக செய்தித் தொடர்பாளருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – 36 பேரை கைது செய்த உ.பி காவல்துறை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்