Aran Sei

கடந்த 5 ஆண்டுகளில் 35 ஆயிரம் பெண்கள் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்துள்ளனர் – ஒன்றிய அரசு தகவல்

2017-2021 ஆண்டுகளுக்கிடையே 35,493 வரதட்சணை இறப்புகள் பதிவாகியுள்ளன என்று ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-2021 ஆண்டுகளுக்கிடையே இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 20 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும் உத்தரப் பிரதேசத்தில் தினசரி ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன.

வரதட்சணை வாங்குவதை விட கேவலமானது வேறு எதுவும் இல்லை: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கருத்து

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பகிர்ந்துள்ள தரவுகளின்படி, 2017 முதல் 2021 ஆண்டுகளுக்கிடையே இந்தியாவில் 35,493 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன.

2017-ம் ஆண்டில், 7,466 வரதட்சணை மரணங்களும் 2018-ல் 7,167 மரணங்களும் 2019-ல் 7,141 மரணங்களும் பதிவாகியுள்ளன. மேலும் 2020-ல் 6,966 மரணங்களும் 2021-ல் 6,753 வரதட்சணை மரணங்களும் பதிவாகியுள்ளன.

செவிலியர்களுக்கான பாடத்திட்டம்: “அழகு குறைவான பெண்ணின் திருமணத்திற்கு வரதட்சணை உதவுகிறது” – பகுதியை நீக்க சிவசேனா கோரிக்கை

அந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 11,874 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும் பீகாரில் 5,354, மத்தியப் பிரதேசத்தில் 2,859, மேற்கு வங்காளத்தில் 2,389 மற்றும் ராஜஸ்தானில் 2,244 வரதட்சணை மரணங்கள் நடந்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 198 வரதனை மரணங்களும், கடந்த ஆண்டு மட்டும் 27 பெண்களும் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்துள்ளனர்.

Source : NDTV

Jenram thoughts on Udhayanidhi Stalin elevation to minister | Minister Udhayanidhi Stalin | Jenram

கடந்த 5 ஆண்டுகளில் 35 ஆயிரம் பெண்கள் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்துள்ளனர் – ஒன்றிய அரசு தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்