Aran Sei

கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களை அவமதித்ததாக புகார் – சீனாவில் 3 பேர் கைது

கடந்த  ஆண்டு ஜுன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவ வீரர்கள் உயிரிழந்ததை பெய்ஜிங் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியதை அடுத்து இது தொடர்பாக கருத்து தெரிவித்தற்காக 3 பேர் கைது செயப்பட்டிருக்கின்றனர் எனச் சீன அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஜூன் 15, 2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவங்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA)  நான்கு வீரர்கள் உயிரிழந்ததோடு, ஒருவர் படுகாயமடைந்ததாக சீனா அரசு அதிகார்ப்பூர்வமாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) உறுதி செய்தது.

இது தொடர்பாக் தனது சமூக ஊடக பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த,  தி எக்னாமிக் அப்சர்வரின் முன்னாள் பத்திரிக்கையாளரான கியூ ஜிமிங், “உயிரிழப்புகள் அதிகமாக இருக்கக்கூடும். ஏனெனில் இறந்தவர்களுக்கு உதவ சில வீரர்கள் வந்ததாக அதிகார்ப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. அவர்களில் சிலர் உயிரிழந்திருக்கலாம்” என கருதுவதாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.

‘துப்பாக்கிகளுக்கு எதிராக போராடிய எங்களுக்கு எலிகளை கண்டு பயமில்லை’ – பாஜகவை எச்சரித்த மம்தா பானர்ஜி

மேலும் இந்தத் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் உடனடியாக உறுதிபடுத்திய நிலையில், சீனா உறுதிபடுத்த ஏன் 8 மாதங்கள் ஆனது எனவும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

”இந்திய ராணுவத்தின் சட்டவிரோத அத்துமீறலைக் கையாளும்போது காயமடைந்த மற்றும் உயிரிழந்த வீரர்களை அவமதித்தோடு, தவறாக தகவல் வெளியிட்டதற்காக 34 வயதான கியூ ஜிமிங் கைது செய்யப்பட்டார்” என நாஞ்சிங் காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளதாக, தி இந்து தெரிவித்துள்ளது.

“இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்துவதற்காக, இறந்த வீரர்கள் தொடர்பாக சட்டவிரோத கருத்துக்கள் தெரிவித்தேன்” எனக் கியூ ஜிமிங் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘புதுச்சேரியில் பின்வாசல் வழியாக காலூன்ற முயலும் பாஜக, இது தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே’ – திருமாவளவன்

கியூவின் கைது செய்யபட்டதை தொடர்ந்து, அவரது சமூக ஊடக கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக, அவரது கருத்து தொடர்பாக இணையத்தில் நடைபெற்று வரும் விவாதங்களை, ஞாயிறன்று  (பிப்ரவரி 21) ஒரே நாளில் 73 கோடி பேர் பார்வையிட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் உயிரிழப்பு தொடர்பாக, வீசாட் (WeChat) செயலியின் குழு உரையாடலின்போது  தெரிவித்ததற்காக, தலைநகர் பெய்ஜிங்கை சேர்ந்த 28 வயதான சென் மற்றும் இணைய பயன்பாட்டாளர்கள் அளித்த புகாரின் பெயரில், மியான்யாங் நகரை சேர்ந்த 25 வயதான யாங் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கின்றனர் எனச் சீன அதிகாரிகள் கூறியதாக, தி இந்து தெரிவித்துள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களை அவமதித்ததாக புகார் – சீனாவில் 3 பேர் கைது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்