Aran Sei

இந்தியாவில் வீணாகும் கொரோனா தடுப்பூசி; தமிழகம் முதலிடம் – தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த பதில்

நாடு முழுவதும் ஏப்ரல் 11 ஆம் தேதிவரை 23 விழுக்காடு தடுப்பூசிகள் வீணாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டகப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அதிகபட்சமாக வீணாகியிருக்கிறது என்றும், கேரளா, மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம், மிசோரம், கோவா, டாமன் மற்றும் டையூ, அந்தமான் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளில் 1 விழுக்காடு கூட வீணாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 10.34 கோடி தடுப்பூசி பயன்படுத்தபட்டதில், 44.78 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வீணாகியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 55 லட்சம் டோஸ்கள் கிடைக்கப்பெற்றன. அதில், 3.75 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வழியாகத் தெரியவந்துள்ளது. இன்னும் தமிழகத்தில் கையிருப்பாக 4 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து உள்ளது. தற்போது தமிழ்நாட்டில்  11 விழுக்காடு டோஸ்கள் வீணாகி உள்ளன. இது இந்தியாவில் வீணாக்கும் மாநிலங்களில் அதிகபட்சமாகும். உலக சுகாதார மையம் கொரோனா தடுப்பு மருந்து வீணாவது  10 விழுக்காட்டிற்கு கீழ் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘இந்தியாவுக்கு செல்வதை தவிருங்கள்’ – எச்சரிக்கும் அமெரிக்கா

தடுப்பூசி செலுத்தப்படுவதன் மூன்றாவது கட்டமாக, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அனைவருக்கும் செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, மருத்து நிறுவனங்களிலிருந்து மருந்துகளை மாநிஅல் அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசிகள் வீணாவதால் அந்த மாநிலங்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய அளவில் பாதிப்புகள் ஏற்படலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Source : NDTV

 

இந்தியாவில் வீணாகும் கொரோனா தடுப்பூசி; தமிழகம் முதலிடம் – தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த பதில்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்