குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஏபிஜி (ABG) கப்பல் கட்டுமான ரூ 22,842 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அகில இந்திய வங்கிய ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”நாட்டின் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிடம் இருந்து 2014 ஆம் ஆண்டில் ஏபிஜி நிறுவனம் ரூ. 22 ஆயிரம் கோடியை கடனாக பெற்றுள்ளது. அதனை அந்த நிறுவனம் டிசம்பர் 2015ல் பங்குகளாக மாற்றியுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
”2016 ஜூலை மாதம் இந்த கடன் வாராக் கடன்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், திவால் மற்றும் திவால் குறியீடு சட்டத்தின் கீழ் 92 விழுக்காடு, (ரூ. 20,200 கோடி) கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏபிஜி நிறுவனம் 2019 நவம்பரில் எஸ்பிஐ அளித்த புகாரின் பெயரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கடந்த வாரம் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிந்துள்ளது.
தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் என மொத்தம் 28 வங்கிகளில் ஏபிஜி நிறுவனம் மோசடி செய்துள்ளது. இதில் குறைந்தபட்சமாக யெஸ் வங்கியிடம் ரூ. 2 கோடியையும், அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கியிடம் ரூ. 7,089 கோடியையும் அந்த நிறுவனம் மோசடி செய்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.