Aran Sei

2019 ஹைதராபாத் என்கவுன்டர் போலியானது – உச்சநீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காவல்துறை  என்கவுண்டரில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் கொலை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். இந்த என்கவுண்டரை விசாரிக்க ஆணையம் ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்தது. உயிரிழக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவே இவர்களை காவல்துறையினர் சுட்டதாக ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உயிரிழந்த நான்கு பேரில் மூவர் சிறார்கள். ஆனால், காவல்துறையினர் அவர்களை 20 வயது கொண்டவர்கள் என்று கூறியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையில் வெளிப்படையான குறைபாடுகளை சுட்டிக்காட்டிய ஆணையம், கொலைக் குற்றத்திற்காக காவல்துறையைச் சேர்ந்த 10 பேரை விசாரிக்கப் பரிந்துரைத்துள்ளது.

சேலத்தில் மாற்றுத்திறனாளி காவல் மரணம் – மக்கள் போராட்டத்தின் காரணமாக மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம்

”நாங்கள் என்ன கருதுகிறோம் என்றால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை மரணமடையச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவே காவல்துறையினர் சுட்டுள்ளனர்.  என்கவுண்டர் நடைபற்ற காலத்தில் உயிரிழந்த ஜோலு சிவா, ஜோலு நவீன், சிந்தகுண்டா சென்னகேசவுலு ஆகியோர் சிறார்களாக இருந்தனர் என்பது எங்கள் கருத்து” என்று ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கால்நடை பெண் மருத்துவரைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் முகமது ஆரிப், சிந்தகுண்டா சென்னகேசவுலு, ஜோலு சிவா, ஜொல்லு நவீன் ஆகிய நான்கு பேர் 2019 ஆண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் ஹைதராபாத் அருகே NH-44 நெடுஞ்சாலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே நெடுஞ்சாலையில் 27 வயது கால்நடை மருத்துவரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை: காவல்துறை விசாரணையில் பழங்குடி மரணம் – எலும்பு முறிவு இருந்ததாக உடற்கூராய்வில் தகவல்

அன்று, பெண் கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார் என்று காவல்துறை கூறியது. அதன்பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை எரித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவின்  அறிக்கை சீலிடப்பட்ட  கவரில் இன்று உச்சநீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்க  தெலங்கானா உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை இளைஞர் காவல் நிலைய மரணம் – வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி, கால்நடை மருத்துவரின் கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது தொடர்பான இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையிலான ஆணையத்துக்கு 6 மாத கால அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியது.

சென்னையில் காவல்நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் – எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

என்கவுன்டருக்கு வழிவகுத்த சூழ்நிலைகள்குறித்து விசாரிக்கவும், ஆறு மாதங்களில் அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் டிசம்பர் 12, 2019 யில்  முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையிலான சிர்புர்கர் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரேகா சொந்தூர் பல்டோடா சிபிஐ முன்னாள் இயக்குநர் டிஆர் கார்த்திகேயன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

Source: NDTV

Subramanian Swamy யை கேள்வி கேக்கும் தைரியம் Congress க்கு இருக்கா? Haseef

2019 ஹைதராபாத் என்கவுன்டர் போலியானது – உச்சநீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்