Aran Sei

2011-ம் ஆண்டுக்கு முன்னர் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் தொடர அரசாணை வெளியிடுக – தமிழ்நாடு அரசுக்கு இரா. முத்தரசன் வலியுறுத்தல்

2011-ம் ஆண்டுக்கு முன்னர் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் தொடர  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்னர் ஆசிரியர் பணி நியமனம் பெற்றவர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று முந்தைய ஆட்சியில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இலவச கட்டாயக் கல்வி சட்டப்படி ஒன்றிய  அரசு தகுதித் தேர்வை கட்டாயம் ஆக்கியுள்ளது. இத்தகுதி தேர்வு எழுத, கால அவகாசம் கோரிய ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பது நியாயமற்றது.

OLA, UBER ஐ புறக்கணித்து புதிய செயலியை உருவாக்கிய தொழிற்சங்கம் – கார்பரேட் நிறுவனங்களுக்கு சவால் விடும் கோயம்புத்தூர் ஆட்டோ ஓட்டுனர்கள்

நான்கு லட்சம் ஆசிரியர்களின் பத்தாண்டுக்கும் மேலான பணித் தொடர்ச்சி, அதில் அவர்கள் பெற்றுள்ள திறன் மேம்பாடு ஆகியவற்றை உயர் நீதிமன்றத் தீர்ப்பு கருத்தில் கொள்ளவில்லை. இந்த நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பால் நான்கு லட்சம் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பெரும் நெருக்கடியை சந்திக்கிறது.

அமித் ஷா பேசியதன் எதிரொலி – ட்விட்டரில் ட்ரெண்டாகும் #இந்தி_தெரியாது_போடா

ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு உரிய சட்ட ஏற்பாடுகளை செய்து, 2011-ம் ஆண்டுக்கு முன்னர் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் தொடர அரசாணை வெளியிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது” என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

**********************                         ****************                        ***************************

இந்திய நாடாளுமன்றத்தில் உளறி கொட்டிய ஒ.பி.எஸ்ஸின் மகன் ஒ.பி.ரவிந்தர நாத், கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்

2011-ம் ஆண்டுக்கு முன்னர் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் தொடர அரசாணை வெளியிடுக – தமிழ்நாடு அரசுக்கு  இரா. முத்தரசன் வலியுறுத்தல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்