Aran Sei

பாஜக ஆட்சி செய்யும் ஹரியானாவில் மசூதியை அடித்து நொறுக்கிய 200 பேர் கொண்ட கும்பல் – தொழுது கொண்டிருந்த இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்

ரியானாவில் மசூதிக்குள் அத்துமீறி நுழைந்த 200 பேர் கொண்ட கும்பல் ஒன்று, தொழுது கொண்டிருந்த இஸ்லாமியர்களை மிரட்டியதுடன், மசூதியை சேதப்படுத்திவிட்டு சென்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் குருகிராம் நகரில் உள்ள ஒரு மசூதிக்குள் ராஜேஷ் சௌஹான் என்கிற பாபு, அனில் படோரியா மற்றும் சஞ்சய் வியாஸ் ஆகியோர் தலைமையில் சுமார் 200 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அத்துமீறி நுழைந்த, அங்கு தொழுது கொண்டிருந்த இஸ்லாமியர்களை மிரட்டியதுடன், மசூதியை சேதப்படுத்திவிட்டு சென்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கியான்வாபி மசூதி விவகாரம்: ஆர்எஸ்எஸ் எனும் சாத்தான் வேதம் ஓதுகிறது

குருகிராமில் உள்ள போரா காலன் என்ற பகுதியில் நான்கு இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகிறது. இவர்கள் அந்த பகுதியில் உள்ள மசூதியில் தொழுகை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் சமீபகாலமாக அந்த 4 குடும்பத்தையும் அங்கிருந்து வெளியேற்ற சிலர் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் தொழுகை நடந்து கொண்டிருக்கையில், திடீரென்று 200 பேர் கொண்ட கும்பல் ஒன்று அத்துமீறி மசூதிக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி மிரட்டல் விடுத்தது. மேலும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் மசூதியை அடித்து சேதப்படுத்தினர். அதன்பிறகு அவர்கள் மசூதியின் கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

போரா கலன் கிராமத்தில் அக்டோபர் 12 ஆம் தேதி இரவு நடந்த இந்த சம்பவத்தில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர், ஆனால் நேற்று (அக்டோபர் 13) மாலை வரை யாரும் கைது செய்யப்படவில்லை.

அந்த இடத்திலிருந்து ஒரு மொபைல் போனை காவல்துறையினர் மீட்டுள்ளனர், இது தாக்குதல் நடத்திய கும்பலின் ஒரு பகுதியினருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கியான்வாபி மசூதி: சிவலிங்கத்தை வழிபடப் போவதாக அறிவித்த இந்து சாமியார் – தடுத்து நிறுத்திய காவல்துறை

இந்த சம்பவம் தொடர்பாக சுபேதார் நஜார் முகமது பிலாஸ்பூர் காவல்நிலையத்தில் தொடர்ந்து, கலவரம், மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தல் மற்றும் சட்டவிரோதமாக ஒன்றுகூடல் தொடர்பான பிரிவுகளின் கீழ் ராஜேஷ் சவுகான், அனில் படோரியா, சஞ்சய் வியாஸ் மற்றும் பலர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரின்படி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, உண்மைகளை நாங்கள் சரிபார்த்து வருகிறோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று காவல்துறை அதிகாரி கஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Source : NDTV

என்னய வச்சி காமெடி ஒன்னும் பன்னலயே | Getoutனு சொல்லிட்டு தப்பி ஓடிய H. Raja | Aransei Roast | BJP

பாஜக ஆட்சி செய்யும் ஹரியானாவில் மசூதியை அடித்து நொறுக்கிய 200 பேர் கொண்ட கும்பல் – தொழுது கொண்டிருந்த இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்