Aran Sei

கொரோனா நோய்த்தொற்றால் 2020-2021 கல்வி ஆண்டில் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டன – ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் தகவல்

கொரோனா நோய்த்தொற்றால் 2020-2021 கல்வி ஆண்டில் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டதாகவும், ஆசிரியர்கள் எண்ணிக்கை 2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம், புதிய தேசிய கல்விக் கொள்கைக்காக திரட்டிய பள்ளிக்கல்வி தொடர்பான புள்ளிவிவரங்களுடன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “2020-2021 கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நாடு முழுவதும் 15 லட்சத்து 9 ஆயிரம் பள்ளிகள் இருந்தன. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும்போது, 14 லட்சத்து 89 ஆயிரமாக குறைந்து விட்டது. அதாவது, பள்ளிகள் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கு மேல் குறைந்துள்ளது. தனியார்ப் பள்ளிகள் மூடப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 48% மாணவர்கள் நடந்தே பள்ளிக்கு செல்கின்றனர் – ஒன்றிய கல்வி அமைச்சகம் தகவல்

2020-2021 கல்வி ஆண்டின் தொடக்கத்தில், 97 லட்சத்து 87 ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தனர். அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும்போது, அவர்கள் எண்ணிக்கை 95 லட்சத்து 7 ஆயிரமாக குறைந்து விட்டது. அதாவது, 1.95 விழுக்காடு ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்தியாவில் 44.85 விழுக்காடு பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி உள்ளது. அதிலும், 34 விழுக்காடு பள்ளிகளில் மட்டுமே இணைய இணைப்பு உள்ளது. 27 விழுக்காடு பள்ளிகளில் மட்டுமே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக தனி கழிப்பறை உள்ளது. அவற்றில் 49 விழுக்காடு பள்ளிகளில் மட்டுமே கைப்பிடியுடன் கூடிய சாய்வுப்பாதை உள்ளது.

கொரோனாவால் மாணவர் சேர்க்கை தள்ளிப்போடப்பட்டதால், நலிந்த குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் சேர்வது குறைந்து விட்டது. குறிப்பாக, 2020-2021 கல்வி ஆண்டில் 19 லட்சம் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : the hindu

பாஜக சங்கி சூர்யாவின் ரவுடித்தனம் | புணர்தலா? ரெட்டியின் ஆபாச ட்வீட் | Aransei Roast | BJP

கொரோனா நோய்த்தொற்றால் 2020-2021 கல்வி ஆண்டில் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டன – ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்