Aran Sei

குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்கட்சி தலைவர்களின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு – 13 கட்சிகள் இணைந்து ஒருமனதாக முடிவு

Credti: The Wire

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு. அவருக்கும் 13 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

யஷ்வந்த் சின்ஹாவை குடியரசு தலைவருக்கான பொது வேட்பாளராக ஒருமனதாக நாங்கள் (எதிர்கட்சிகள்) முடிவு செய்துள்ளோம் என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகள் வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில், “சின்ஹாவை போட்டியின்றித் தேர்வு செய்ய அவரை ஆதரிக்குமாறு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன. பாஜகவின் மூத்த தலைவராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, 2018 ஆண்டு கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு சில ஆண்டுகள் முன்பிருந்து, பாஜகவை விமர்சிக்க தொடங்கினார்.

அக்னிபத் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ள ஒன்றிய அரசு

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஒருமித்த வேட்பாளரை முடிவு செய்வதற்கான கூட்டத்தைத் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கூட்டியிருந்தார். அதில், ஒரு மனதாக யஷ்வந்த் சின்ஹா ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட தேசியவாத காங்கிரஸ் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, காந்தியின் கொள்ளுப் பேரன் கோபால கிருஷ்ண காந்தி ஆகியோர் மறுத்ததைத் தொடர்ந்து யஷ்வந்த் சின்ஹாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெறுங்கள் – தமிழக காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிட முன்னேற்ற கழகம், சமாஜ்வாதி, தேசிய மாநாட்டுக் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ் -இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன், ராஷ்ட்ரிய ஜனதா தளம், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டன.

காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன் கார்கே, ஜெய்ராம் ரமேஷ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கருத்து

கடந்த ஆண்டு மார்ச் மாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா, குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக யஷ்வந்த் சின்ஹாவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

மம்தாவிற்கு பதிலளித்து சின்ஹா பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவில் ”ஒரு பெரிய நோக்கத்திற்காக நான் கட்சியிலிருந்து  விலகி எதிர்கட்சிகளின் ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி, பிஜு ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி, சிரோமணி அகாலி தளம் மற்றும் யுவஜனா ஸ்ராமிகா ரிது காங்கிரஸ் கட்சி ஆகிய ஐந்து பிராந்திய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Source: The Wire

 

 

 

 

குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்கட்சி தலைவர்களின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு – 13 கட்சிகள் இணைந்து ஒருமனதாக முடிவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்