Aran Sei

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 மீனவர்கள் கைது – விசைப்படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படை

ல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 12பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களின் இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்த 12 மீனவர்களையும் சிறை பிடித்துள்ளனர்.

‘சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் பாஜக’ – குறுக்கு வழியால் தேர்தலில் வென்றதாக கமுதி மக்கள் குற்றச்சாட்டு

கடந்த 8ஆம் தேதி கைது செய்யப்பட்ட 11மீனவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று மீண்டும் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இந்த சூழலில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது, மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 மீனவர்கள் கைது – விசைப்படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்