உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் ஏறத்தாழ 1000 குழந்தைகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், கடந்த வருடம் 2,131 குழந்தைகள் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது முறையே ஏப்ரல் 1 முதல் 15 வரை 264 குழந்தைகளுக்கும், ஏப்ரல் 16 முதல் 30 வரை 1,053 குழந்தைகளுக்கும், மே 1 முதல் 14 வரை 1,618 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
கொரோனா காலத்தில் குழந்தைகளின் நலனை உறுதி செய்ய வேண்டும் – சிறார் நீதிக்குழு வேண்டுகோள்
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள சமூக மேம்பாட்டு குழுமத் தலைவர் அனூப் நொவ்ட்டியல், உத்தரகாண்ட மாநிலத்தில் 1 லட்சம் பேரில் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதாகவும், இது உத்தரப்பிரதேசத்தை விட 7 மடங்கு அதிகம் என்று தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.