பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழகத்தில் வரும் 12ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்டத் திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 12-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க சட்டமன்ற கட்சித்தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. 10% இட ஒதுக்கீடு வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான் ஓதும் வேதம் | Gayathri Raghuram sv sekar #Media #Reservation கியாரே செட்டிங்கா? Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.