ராணுவத்திற்கு ஒப்பந்த முறையில் ஆட்களை சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், ஹரியான, உத்தரபிரதேச மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது தெலுங்கானாவில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
தெலுங்கானா ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார், 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தெலுங்கானா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்துள்ள ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர், ”ரயில்வே பாதுகாப்பு படையினர் நடத்திய தடியடி, கண்ணீர் புகை குண்டு என எதுவும் பலனளிக்காததைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.” என்று தெரிவித்துள்ளார்.
பீகார்: அக்னிபத் விவகாரம் – பாஜக எம்.பியின் பெட்ரோல் பங்க், துணை முதலமைச்சர் வீடு மீது தாக்குதல்
இந்நிலையில் ரயில்கள், பேருந்துகளை எரிப்பவர்கள் ராணுவத்தில் சேர தகுதியற்றவர்கள் என்று முன்னாள் ராணுவ தளபதி விபி மாலிக் தெரிவித்துள்ளார்.
கார்கில் போரின்போது இந்திய ராணுவத்தை வழிநடத்தி வெற்றியைப் பெற்றுத்தந்த மாலிக், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,” ராணுவம் என்பது தன்னார்வப் படை. அது ஒன்றும் நலவாரியம் அல்ல. அதில் இருப்பவர்கள் அனைவரும் தேசத்துக்காக போராடும் சிறந்த வீரர்களாக இருக்க வேண்டும். தேசத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டு ரயில்கள், பேருந்துகளை எரித்து சேதத்தை ஏற்படுத்துபவர்கள் ராணுவத்தில் சேர தகுதியற்றவர்களாவர்” என்று கூறியுள்ளார்.
Source: The Hindu Tamil
எச்சரிக்கை I நெருங்கும் காவி இருள் I தாமதித்தால் ஆபத்து I Maruthaiyan Interview I Nupur Sharma I BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.