முஹம்மது நபிகள் குறித்து பாஜக பிரமுகர்கள் கருத்து தெரிவித்ததை அடுத்து, இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறவிருக்கும் கால்பந்து உலகக் கோப்பையை காண அனுமதி கோரிய இந்தியர்களின் விண்ணப்பங்களை மறுபரீசிலனை செய்ய கத்தார் அரசு முடிவு செய்துள்ளது.
மறுபரீசிலனை முடிவின் ஒருபகுதியாக உலக கோப்பை போட்டியின் போது தங்குவதற்கு அனுமதி கேட்ட இந்தியரின் விண்ணப்பத்தை கத்தார் அரசு நிராகரித்துள்ளது.
இது தொடர்பான முன்னஞ்சலுக்கு பதிலளித்த அவர், “முஹம்மது நபிகள் தொடர்கான கருத்து தெரிவிக்கப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் வரும் முன்பதிவுகளை அனுமதிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் பணியில் கத்தார் அரசு உள்ளது”. என்று தெரிவித்துள்ளார்.
கியான்வாபி மசூதி தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தின் போது பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, முஹம்மது நபிகள் குறித்த அவதூறு கருத்தை தெரிவித்திருந்தார். மேலும், டெல்லி மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் பாஜக நவின் ஜிண்டால், அவரது ட்விட்டர் பக்கத்தில் நபிகள் குறித்து அவதூறாக பதிவிட்டிருந்தார்.
பாகிஸ்தான்: நூபுர் ஷர்மாவைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக பல்வேறு கட்சிகள் அறிவிப்பு
இதற்கு கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள், அந்நாட்டில் உள்ள இந்திய தூதர்களை அழைத்து, அவர்களது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.
பாஜக பிரமுகர்கள் தெரிவித்த கருத்து தொடர்பாக இந்திய அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என்று கத்தார் அரசு தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, நபிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்களை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டிருந்தது.
Source: Free Press Journal
இனப்படுகொலையை தூண்டினாரா Periyar? | Chola Nagarajan Interview | Subramanian Swamy | Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.