உத்தரபிரதேச மாநிலம் தியோபந்தில் நடைபெற்ற ஜாமியத் உலமா ஐ ஹிந்த் மாநாட்டில் பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொது சிவில் சட்டம், தனிநபர் சட்டத்தைக் கடைப்பிடிப்பதைத் தடுக்கும். இது இந்திய அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களுக்கு எதிரானது என்று ஜாமியத் உலமா ஐ ஹிந்த் தெரிவித்துள்ளது.
இது அரசியலமைப்பின் உண்மையான உணர்வை புறக்கணிக்கிறது” என்று தீர்மானம் கூறியது. இஸ்லாமிய சட்டத்தில் தலையிடுவதை எந்த இஸ்லாமியரும் ஏற்றுக் கொள்ளமாட்டார். எந்தவொரு அரசாங்கமும் பொது சிவில் சட்டத்தை செயல்படுத்தும் தவறை செய்தால், இஸ்லாமியர்கள் இந்த அநீதியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பொது சிவில் சட்டம் என்பது அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் மதம், பாலினம் மற்றும் பலவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சமமாக பொருந்தும் தனிப்பட்ட சட்டங்களை உருவாக்குவதற்கான ஒரு முன்மொழிவாகும். ஒன்றியத்தில் மாநிலங்களிலும் உள்ள பாஜக தலைமையிலான அரசாங்கம் இதை செயல்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.
Source : india today
Defamation Case போட்டு Annamalai ய Court க்கு இழுக்கனும் Vanchi Nathan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.