Aran Sei

பிரதமர் அறிவித்த 10 லட்சம் வேலைவாய்ப்பு என்பது பெரிய பொய் – ராகுல்காந்தி விமர்சனம்

டுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பணியிடங்களை நிரப்பப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது பொய் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, ஒன்றிய அரசுத் துறைகளின் மனித வளங்கள் குறித்து பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரதமரின் அறிவிப்பு குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி ‘கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலை தரப்படும் என இளைஞர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. அதேபோல் தான், தற்போதும் 10 லட்சம் அரசு வேலை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ஜும்லா(பொய்) அரசு இல்லை, மகா ஜும்லா அரசு ஆகும். பிரதமர் வேலைகளை உருவாக்குவதில் அல்ல, வேலை தொடர்பான செய்திகளை உருவாக்குவதில் நிபுணர்’ என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் அறிவித்த 10 லட்சம் வேலைவாய்ப்பு என்பது பெரிய பொய் – ராகுல்காந்தி விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்