சீன உளவுக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்து இருப்பதால், அதை இலங்கையில் நுழைய விடாமல் தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஜிஎஸ்டி வரி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, அக்னிபாத் உள்ள பல்வேறு பிரச்னைகள்குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
சீனாவின் ஊடுருவலும் பிரதமரின் மௌனமும் நாட்டுக்கு மிகவும் தீங்கானது – ராகுல்காந்தி
இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பேசிய வைகோ, “சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற உளவுக்கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு வாரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சீன உளவுக்கப்பல், அனைத்து நிலைகளையும் செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் கொண்டது என்றும், இந்த கப்பலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சீன உளவுக் கப்பலை அனுமதிக்கக் கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் எனக்கூறிய அவர், சீன கப்பலின் நடவடிக்கைகளை கண்காணிக்க கடற்படையினர், கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களை அவமதித்ததாக புகார் – சீனாவில் 3 பேர் கைது
மேலும், சீன உளவு கப்பல்குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், சீனக் கப்பலை இலங்கை அரசு அனுமதிக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சீன தனது உளவு கப்பலான யுவான் வாங்-5 கப்பலை இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த திட்டமிட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Sour
Source: News 7 Tamil
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.