Aran Sei

சாப்பிட்டு விட்டு பணம் தர மறுப்பு – உணவகத்திற்கு சீல் வைத்து விடுவோம் என்று மிரட்டிய இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

னியார் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்ததுடன், உணவு சரியில்லை என்று ரகளையில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகளை கள்ளக்குறிச்சி காவல்துறையினர் கைது செய்ததுள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பிரபல தனியார் உணவகத்தில் கடந்த 2-ம் தேதி இரவு இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேர் சென்று உணவு உண்டுள்ளனர். சாப்பிட்டு முடித்த பின்பு உணவாக ஊழியர் உணவிற்கான பில்லை கொடுத்திருக்கிறார்.

அப்போது கோபமடைந்த அந்த மூவரும், “எங்களுக்கே பில்லா… நாங்கள் யார் தெரியுமா… நாங்கள் எல்லோரும் இந்து முன்னணியின் நிர்வாகிகள். நாங்கள் நினைத்தால் இந்த உணவகத்திற்கு சீல் வைத்துவிடுவோம். எங்களிடம் பில் கேட்ட விஷயம் தெரிய வந்தால்” என்று ரகளை செய்திருக்கிறார்கள். அப்போது “பில் கொடுங்கள் சார் ப்ளீஸ்” என்று உணவாக ஊழியர் மீண்டும் கேட்டிருக்கிறார்

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு – இந்து முன்னணியை சேர்ந்த இருவர் கைது

அதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர்கள், “நீங்கள் கொடுத்த சாப்பாடு எதுவும் நல்லாவே இல்லை. எல்லாமே கெட்டுப்போனதுதான். அதனால் பணம் கொடுக்க முடியாது. உங்கள் உணவகத்தைச் சோதனையிட வேண்டும்” என்று கூறிக்கொண்டே சமையல் கூடத்துக்குச் சென்றவர்கள், அங்கிருந்த பொருள்களை தூக்கி வீசியிருக்கின்றனர்.

தொடர்ந்து “உங்கள் உணவகத்திற்கு சீல் வைக்காமல் இருக்கணும்னா எங்களை கவனிக்கனும்” என்று பணமும் கேட்டிருக்கின்றனர். அதேநேரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர் உணவாக ஊழியர்கள். அதனடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர், ரகளையில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அஜய், மோகன் மூவரையும் கைதுசெய்து அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Source : vikatan

India Vs Pakistan | மத Cricket விளையாடும் சங்கிகள் | Arshdeep Singh | Mohammed Shami | Virat Kohli

சாப்பிட்டு விட்டு பணம் தர மறுப்பு – உணவகத்திற்கு சீல் வைத்து விடுவோம் என்று மிரட்டிய இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்