“பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாதுராம் கோட்சேவை கடவுளாகப் பார்க்கிறார் என்று குஜராத் மாநில வட்காம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி ட்வீட் செய்தற்காக அவரை கைது செய்துள்ளதாக” அசாம் காவல்துறை தெரிவித்துள்ளது.
குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கைது – காரணம் சொல்லப்படவில்லை என உதவியாளர் குற்றச்சாட்டு
மேலும் அந்த டீவீட்டின் வடகிழக்கு மாநிலங்களில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு மத நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டும் என்று ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.
ஜிக்னேஷ் மேவானியின் இந்த டீவீட்டிற்கு எதிராக போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் பாஜக செயற்குழு உறுப்பினரான அரூப் கே.ஆர்.டே ஏப்ரல் 19 ஆம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அப்புகாரில், இந்த டீவீட் பொது அமைதியைக் குலைக்கும் நோக்கிலும், மத நல்லிணக்கத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகவும் உள்ளது என்று கூறியுள்ளார்.
அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று சொன்னதற்கு கைதா? – ஜிக்னேஷ் மேவானி கேள்வி
சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதை “ஜனநாயக விரோதம்”, “அரசியலமைப்புக்கு விரோதமானது” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.