Aran Sei

குஜராத்: தலித் பெண் சமைத்த மதிய உணவு – சாப்பிட மறுத்த ஒபிசி மாணவர்கள்

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசோக்தா தொடக்கப் பள்ளியில், தலித் பெண் சமைத்த மதிய உணவு அங்குப் பயிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் சாப்பிட மறுத்து வருகின்றனர்.

மோர்பி காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில், “பள்ளியில் மதிய உணவு தயாரிப்பதற்கான அரசு ஒப்பந்தம் தாரா மக்வானா என்ற தலித் பெண்ணிற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ஜூலை மாதம் வழங்கப்பட்டுள்ளது.

தலித் பெண் சமைத்த சாப்பட்டை தங்கள் பிள்ளை சாப்பிட கூடாது என மொத்தமுள்ள 153 மாணவர்களில் 147 மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

”மாணவர்கள் மதிய உணவிற்காக வரிசையில் நிற்க மறுத்தனர். ஏன் என அவர்களது பெற்றோரிடம் கேட்டபோது, ஒரு தலித் பெண் சமைத்த உணவை எங்கள் குழந்தைகள் சாப்பிடுவதை அனுமதிக்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்” என்று தாரா மக்வானாவின் கணவர் கோபி கூறியுள்ளார்.

உத்தரகண்ட்: அரசுப் பள்ளியில் தலித் பெண் சமையல்காரர் சமைத்த உணவை சாப்பிட மறுத்த ஆதிக்கச்சாதி மாணவர்கள்

 

மேலும், ”இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அது துணை காவல் காண்காணிப்பாளருக்கு மாற்றப்பட்டது. இது பள்ளி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையிலான பிரச்னை. இதில் நாங்கள் தலையிட முடியாது என்று அவர் கூறினார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளியின் முதல்வர், “பிரச்னை தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களுடன் இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், அவர்கள் பிடிவாதமாக தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டனர்” என்று கூறியுள்ளார்.

”சாதி மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க கூடாது என்றும், அனைவரும் சமம் என்றும், யாரும் தீண்டதகாதவர்கள் அல்ல என்றும் மாணவர்களுக்குக் கற்பிக்கிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர்களின் பெற்றோரை எங்களால் சமாதானப்படுத்த முடியவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source: The Wire

Did Kallakurichi Sakthi School driver blackmailed the girl? Adv Kesavan Interview | New CCTV Footage

 

 

குஜராத்: தலித் பெண் சமைத்த மதிய உணவு – சாப்பிட மறுத்த ஒபிசி மாணவர்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்