நாட்டிலேயே அதிக மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டு, கறுப்புப் பணத்துக்கு ஈடானதாக மாறிவிட்டது. ஆதலால் 2,000 ரூபாய் நோட்டுகளை படிப்படியாக ரத்துசெய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில் குமார் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று ஜீரோ ஹவரில்(zero-hour) பேசிய பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில் குமார் மோடி, “நாட்டிலிருக்கும் பெரும்பாலான ஏ.டி.எம்-களில் 2,000 ரூபாய் நோட்டுகள் காணாமல் போய்விட்டன. மேலும் அவை விரைவில் செல்லாது என்ற வதந்திகளும் வெளிவருகிறது. இது குறித்து மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும். மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது.
அதோடு, 2,000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு, போதைப்பொருள், பணமோசடி போன்ற சட்டவிரோத வர்த்தகங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இதனால், நாட்டிலேயே அதிக மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டு, கறுப்புப் பணத்துக்கு ஈடானதாக மாறிவிட்டது. எனவே 2,000 ரூபாய் நோட்டை அரசு படிப்படியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், மக்கள் தங்களிடமிருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அரசு 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
Source : indianexpress
சேட்லைட் சேகரின் ரூ.2000 ‘சிப்’ | கருப்பு பணத்தை காவியாக்கிய மோடி | Aransei Roast | BJP | MODI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.