Aran Sei

கர்நாடகா: ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகம் – திரும்பப் பெறக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

Credit : The Hindu

ர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடாவில் உள்ள உப்பினங்காடியில் உள்ள அரசு கல்லூரியில், வகுப்பறைக்கு ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளை, ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதற்காக கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ளது.

ஆடைக் கட்டுப்பாட்டிற்கு ஆதரவாக சில மாணவர்களும் எதிராக சில மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கல்லூரிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளரை மாணவர்கள் குழு ஒன்று கன்னத்தில் அறைந்ததாகவும் ஒரு அறையில் அடைத்து வைத்து அச்சுறுத்தியதாகவும் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டதாகக் கூறி சில மாணவர்கள் காவி சால்வை அணிந்து வந்து வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிஜாப் அணியக் கோரும் இஸ்லாமிய மாணவிகள் கல்வியிலிருந்து விலக்கப்பட வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ பசங்கவுடா யத்னால் கருத்து

மேலும், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை இடைநீக்கம் செய்தததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இடை நீக்கத்தை திரும்ப பெறக் கோரியும் மற்றொரு மாணவர்கள் குழு போராட்டத்தில் ஈடுபட்டது.

புத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் கல்லூரி மேம்பாட்டுக் குழுவின் தலைவருமான சஞ்சீவ் மாதந்தூர்,”நீண்ட நாட்களுக்கு முன்பே கல்லூரி ஒரு ஆடைக் கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. கல்லூரியி பயிலும் 40 இஸ்லாமிய மாணவிகளில் பெரும்பாலானவர்கள்  கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இணைங்க பெண்களை அறையில் ஹிஜாப்பை அகற்றிவிட்டு வகுப்புகளுக்கு செல்கின்றனர். ஆறு மாணவிகள் ஆடைக் கட்டுப்பாட்டை பின்பற்றத் தயாராக இல்லாத காரணத்தால் அவர்களை மூன்று நாட்களுக்கு முன்பு கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் அணிவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் – உலக குத்துச்சண்டை சாம்பியன் நிகத் ஜரீன்

“இடை நீக்கத்திற்கு பிறகும் சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். தங்களை பார்த்த பிறகு தலையை மறைக்கும் விதமாக முக்காடு அணியத் தொடங்கினர் என காவி சால்வை அணிந்து வந்த மாணவர்கள் தெரிவித்தனர்” என்று அவர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டறிந்ததாகவும் ஆறு மாணவிகள் இடைக் நீக்கம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்திருப்பதாகவும் மங்களூரு பிராந்திய கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஹிஜாப் தடைக்கு எதிராக போராடிய இருவர் ஹிஜாபுடன் வந்ததால் தேர்வெழுத அனுமதி மறுப்பு

கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு முன்னர், ஹிஜாப் விவகாரம் உச்சத்தில் இருந்த சமயத்தில், இதே கல்லூரியில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், உப்பனங்காடி காவல்துறையினரிடம் பத்திரிகையாளர் அளித்த புகாரில், “கல்லூரி முதல்வரின் கருத்து உள்ளிட்ட காணொளிகளை அழிக்குமாறு மாணவர்களில் ஒரு பிரிவினர் கட்டாயப்படுத்தினர. மேலும், 25 மாணவர்கள் கொண்ட கும்பல், தன்னை ஒரு அறையில் அடைத்து வைத்து,  கல்லூரிக்குள் நுழைந்தது எப்படி?, அனுமதி பெறப்பட்டதா? போ கேள்விகளை எழுப்பினர்” என்று தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் அணிந்து வந்தால் பியுசி தேர்வு எழுத அனுமதி இல்லை – கர்நாடகா கல்வித்துறை அமைச்சர்

பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டதற்கு தட்சிண கன்னடா உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் சீனிவாஸ் நாயக் இந்தாஜே, “மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ட்சிண கன்னடா காவல்துறை கண்காணிப்பாளரை தொழிற்சங்க பிரதிநிதிகள் குழு சந்திக்கும்” என்று கூறியுள்ளார்.

Source: The Hindu

கலைஞர் தமிழ்நாட்டின் அரசியல் அச்சாணி | Subavee Latest Speech on Kalaignar Karunanidhi I Aransei

கர்நாடகா: ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகம் – திரும்பப் பெறக்கோரி  போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்