Aran Sei

கடந்த 8 ஆண்டுகளில் இளைஞர்களுக்குப் பக்கோடா கடை வைப்பதற்கான அறிவுரை மட்டுமே கிடைத்தது – ராகுல் காந்தி கருத்து

மோடி பிரதமராக பதவியேற்ற  8 ஆண்டுகளில், இளைஞர்களுக்குப் பக்கோடை கடை வைக்கப்பதற்கான அறிவுரை மட்டுமே கிடைத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் பதிவிட்டிருக்கும் அவர், “வேலைவாய்ப்புகுறித்த தவறான நம்பிக்கையை மீண்டும் மீண்டும் அளிப்பதன் மூலம், இளைஞர்களை வேலையின்மை என்ற அக்னிபாதையில் நடக்குமாறு பிரதமர் மோடி கட்டாயப்படுத்தியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

அக்னிபத் திட்டத்தில் ஆர்எஸ்எஸின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் உள்ளதா? – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி

மேலும், மோடி பிரதமராக பதவியேற்ற எட்டு ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இளைஞர்களுக்குப் பக்கோடை கடை வைப்பதற்கான அறிவுரை மட்டுமே கிடைத்தது” என்று கூறியுள்ளார்.

நாட்டின் நிலைமைக்கு பிரதமர் மட்டும் தான் காரணம் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ராகுல் காந்தி இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Source: NDTV

உன் அப்பன் வீட்டு சொத்தா? | கோவிலை ஆட்டய போட பாஜக சதி | Maruthaiyan Speech | Chidambaram Temple

 

கடந்த 8 ஆண்டுகளில் இளைஞர்களுக்குப் பக்கோடா கடை வைப்பதற்கான அறிவுரை மட்டுமே கிடைத்தது – ராகுல் காந்தி கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்