Aran Sei

ஒரே நாடு – ஒரே உரம்: ஒன்றிய அரசின் பாரத் மக்கள் உரத்திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Credit: The Telegraph India

ரே நாடு ஒரே உரம் என்ற பாரத் மக்கள் உரத்திட்டம் என்ற திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் விவசாயிகளுக்கு 12-வது தவணையாக ரூ16,000 கோடி நிதி இன்று வழங்கப்பட்டது.

“பிரதமரின் கிசான் சம்மான் சம்மேளன் 2022” என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியை டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

ஒரே நாடு, ஒரே மொழி என்பவர்கள் இந்தியாவின் எதிரிகள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

இந்த நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 13,500 விவசாயிகளும், 1500 வேளாண் புத்தொழில் நிறுவனத்தினரும் பங்கேற்றனர். காணொலிக் காட்சி வாயிலாக ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகளும், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர். ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்களும் இந்த சம்மேளனத்தில் பங்கேற்றனர்.

ஒன்றிய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் 600 பிரதமரின் கிசான் சம்ரிதி மையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள சில்லறை உர விற்பனையகங்கள் படிப்படியாக சம்ரிதி மையங்களாக மாற்றப்படும். விவசாயிகளின் பல்வேறு தேவைகளை இந்த மையங்கள் பூர்த்தி செய்யும். இதனுடன், வேளாண் சம்பந்தமான உரங்கள், விதைகள், மண், விதைகள், உரங்களின் பரிசோதனைக்கான வசதிகள்; விவசாயிகளிடையே விழிப்புணர்வு; பல்வேறு அரசுத் திட்டங்கள் குறித்த தகவல்களை இந்த மையங்கள் வழங்குவதோடு வட்டார மற்றும் மாவட்ட அளவிலான சில்லறை வணிகர்களின் திறன் கட்டமைப்பையும் உறுதி செய்யும். சுமார் 3.3 லட்சம் சில்லறை உர விற்பனையகங்களை இத்தகைய சம்ரிதி மையங்களாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

‘ஒன்றிய அரசின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற அரசியல் திட்டம் நிறைவேறாது’ – திரிணாமூல் காங்கிரஸ்

இந்த நிகழ்ச்சியின் போது பாரத் மக்கள் உரத்திட்டம் என்ற பெயரில் ஒரே நாடு, ஒரே உர திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். “பாரத்” என்ற ஒரே பெயரில் உரங்களை நிறுவனங்கள் சந்தைப்படுத்துவதற்கு உதவியாக பாரத் யூரியா பைகளையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

வேளாண் புத்தொழில் உச்சி மாநாடு மற்றும் கண்காட்சியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது ‘இந்தியன் எட்ஜ்’ என்ற உரம் சம்பந்தமான மின்னணு இதழையும் (e-magazine) பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தரம் நிறைந்த உரம் வழங்கப்படும். இந்தியா, சர்வதேச அளவில் வேளாண் பொருட்கள் உற்பத்தி மையமாக உருவெடுக்கும் என்று தெரிவித்தார்.

Source : business standard

ரூபாய் மதிப்பு குறையலயாம் டாலர்தான் ஏறுதாம் | ஏக்கர் கணக்குல பொய் பேசும் BJP | Aransei Roast | Modi

ஒரே நாடு – ஒரே உரம்: ஒன்றிய அரசின் பாரத் மக்கள் உரத்திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்