இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும் என பாஜக எம்பி பர்வேஷ் வர்மா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு டெல்லியை சேர்ந்த மனீஷ் என்ற நபர் கடந்த வாரம் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது, கொலையில் தொடர்புடையதாக 3 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மனீஷ் கொலையை கண்டித்து டெல்லியில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய டெல்லியின் பாஜக எம்பி பர்வேஷ் வர்மா, குறிப்பிட்ட சமூகத்தினரை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
எங்கெல்லாம் குறிப்பிட்ட மக்களை பார்க்கிறீர்களோ அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்றதுடன், அவர்களிடம் வியாபார ரீதியில் எந்த பொருட்களையும் வாங்க கூடாது என்றார். மறைமுகமாக இஸ்லாமிய சமூகத்தைச் சாடியபடி பேசிய நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கள் சர்ச்சையானது.
இதற்கு விளக்கம் அளித்த அவர், குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை கூறவில்லை என்றும், படுகொலையில் தொடர்புடையவர்களின் குடும்பத்தினரை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்று பேசியதாக தெரிவித்துள்ளார்.
“பாஜக, இஸ்லாமியர்களுக்கு எதிரான போரைத் தொடங்கியுள்ளது. நாட்டின் தலைநகரில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இப்படி பேச முடியும் என்றால், அரசியலமைப்பின் மதிப்பு என்ன?” என்று ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவருமான அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, பாஜக எம்பி பர்வேஷ் வர்மாவுக்கு எதிராக டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Source : NDTV
Bharathi Baskar Insults Reservation System | Sundharavalli | Bharathi Baskar latest speech | Quota
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.