Aran Sei

‘இப்போது நமக்கு தேவை பாஜக இல்லாத இந்தியாதான்’ – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகர் ராவ் கருத்து

இப்போது நமக்கு தேவை பாஜக இல்லாத இந்தியாதான் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருடன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

பாஜகவிற்கு எதிராக ஒத்த எண்ணம் கொண்ட எதிர்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை பாட்னாவில் சந்தித்தார்.

இதன் பிறகு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருடன் இணைந்து தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜக இல்லாத இந்தியா முழக்கத்தை எழுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை சந்தித்தார்

பீகார் மாநிலத்தில் பாஜகவின் கூட்டணியை முறித்து ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து பீகாரில் மீண்டும் ஆட்சியமைத்தார் நிதிஷ்குமார்.

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, தெலுங்கானா முதல்வர் மம்தா பானர்ஜி, சரத் பவார் மற்றும் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து பாஜகவிற்கு எதிரான முன்னணியைத் தொடங்க திட்டமிட்டார்

பாஜகவுடனான தனது கூட்டணியை நிதிஷ்குமார் உடைத்தது பாஜகவிற்கு எதிரான எதிர்க்கட்சி முகாமிற்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 2024 மக்களவை தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிராக 8 முறை முதலமைச்சராக இருந்துள்ள நிதிஷ்குமாரை எதிர்க்கட்சிகள் நிறுத்த வாய்ப்புள்ளது என்று சொல்லப்படுகிறது

Source : NDTV

Kallakurichi Sakthi School case latest update on bail judgement | Advocate rajini

‘இப்போது நமக்கு தேவை பாஜக இல்லாத இந்தியாதான்’ – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகர் ராவ் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்