Aran Sei

‘அதிகாரமிக்கவர்களே புலியைத் தொட்டாலும் தொடுக மொழியைத் தொடாது விடுக’: பாஜகவின் இந்தி மொழி திணிப்புக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம்

மிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எங்களை ஆண்ட இஸ்லாமியரோ தெலுங்கரோ மராட்டியரோ வெள்ளையரோ தங்கள் தாய் மொழியை எங்கள் தலையில் திணித்ததில்லை. தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்து ராஷ்டிரத்தை உருவாக்க, ஒரே மொழி, அது சமஸ்கிருதம் அல்லது அதன் சாயலில் உள்ள இந்தி மொழியை பாஜக திணிக்கிறது – வைகோ கண்டனம்

மேலும் அதிகாரமிக்கவர்களே அன்போடு சொல்கிறேன் புலியைத் தொட்டாலும் தொடுக மொழியைத் தொடாது விடுக” என்று பாஜக அரசின் இந்தி மொழி திணிப்புக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு கடந்த மாதம் அளித்துள்ள அறிக்கையில் (11-வது தொகுதி) மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்றவற்றிலும் மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

இந்தி பேசும் மாநிலங்கள் எனும் A பிரிவு மாநிலங்களில் இதனை முழுமையாக செயல்படுத்தி, ஓரளவு இந்தி பேசும் மாநிலங்களிலும் இதனைத் தொடர்வதுடன், இந்தியா முழுமைக்கும் இந்தியைப் பொது மொழியாக்கிட வேண்டும் என்கிற பரிந்துரையும் இதில் அடங்கியுள்ளது. இந்தியைப் பொது மொழியாக்கிடும் வகையில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் என ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியைப் பயிற்றுவிப்பதற்கான பணியிடங்கள் மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக இருந்தால் அந்தக் கல்வி நிறுவனத்தின் தலைவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிராகத்தான் கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பேட்டியும் கிடையாது ஒன்னும் கிடையாது | நா*சேகராக மாறிய H. Raja | Aransei Roast | BJP | DMK

‘அதிகாரமிக்கவர்களே புலியைத் தொட்டாலும் தொடுக மொழியைத் தொடாது விடுக’: பாஜகவின் இந்தி மொழி திணிப்புக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்