இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ், அதிகளவிலான நோய்பரவலை உண்டாக்கும் என்றும், அதிகளவிலான நபர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டால் பரவலைக் கட்டுப்படுத்தக்கூடும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் தற்போது பரவிவரும் வைரஸ் வகையின், நோய்ப்பரவல் நிலையை ஆராய்ந்ததில், அது அதிவிரைவாக பரவக்கூடிய வகை என்பது தெரியவந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் சௌமியா ஸ்வாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் B.1.617 வகை கொரோனா நோய் கிருமி இந்தியாவில் கண்டறியப்பட்டதாகவும், அதுதான் இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவுக்கு காரணமாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிலநாட்களுக்கு முன்னர் உலக சுகாதார நிறுவனம் B.1.617 வகை கொரோனா நோய் கிருமியை “தேர்வு கொள்ளகூடிய வகை” என்று வகைப்படுத்தியதாகவும், ஆனால் விரைவிலேயே “கவனத்தில் கொள்ளவேண்டிய வகை” என்று வகைப்படுத்தியது என்று சௌமியா ஸ்வாமிநாதன் தெரிவித்துள்ளார்.
“சீன ஆய்வுக் கூடத்திலிருந்து கொரோனா பரவவில்லை” – உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் முடிவு
அதுமட்டுமல்லாது, “கவனத்தில் கொள்ளவேண்டிய வகை” என்று வகைப்படுத்தப்பட்ட B.1.617 வைரஸ், வேகமாக பரவக்கூடியதும் , தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பின்னர் அல்லது இயற்கையாக தொற்றுக்கு ஆளான பின் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறனை தாண்டியும் திறன் பெற்றுள்ளது என்று சௌமியா ஸ்வாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்றால் இந்தியா அதிக பாதிப்புகளை சந்திப்பதற்கு, கொரோனா வகை மட்டும் காரணமில்லை என்றும், அதிகளவிலான மக்கள் கூடியதும், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒழுங்காக கடைபிடிக்கப்படாததுமே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி மற்றும் இதர கட்சி தலைவர்களால் நடத்தப்பட்ட கூட்டங்களுக்கு, அதிகளவிலான மக்கள் கூடியதும் மிகமுக்கிய காரணமாகும் என்று கூறியுள்ள சௌமியா, இதேபோன்று , இந்தியாவில் பலர் கொரோனா நெருக்கடி முடிந்துவிட்டதாக எண்ணி , முகக்கவசம் அணிவது மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிட்டதால், வைரஸ் வேகமாக பரவியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவில், 2% மக்கள் அதாவது 13 கோரி பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சௌமியா, இந்நிலையில் 70-80% மக்களுக்கு தடுப்பூசி செலுத்த பல மாதங்கள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, கொரோனா தொற்று அதிவேகமாக பரவுவதால் தொற்றுக் கிருமி அதிக அளவில் மாறுபாடடையும் வாய்ப்புவுள்ளதால், தற்போது பயன்படுத்தும் தடுப்பூசியே தொற்றுக் கிருமியைக் கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்படக்கூடும் என்றும் கூறியுள்ள சௌமியா ஸ்வாமிநாதன், இது உலகத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
Source: Livemint
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.