Aran Sei

’50 சதவீத இந்தியர்களுக்கு நீரிழிவு நோய் வரலாம்’ – ஆய்வு அறிக்கையில் தகவல்

ந்தியாவில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கும், மூன்றில் இரண்டு பங்கு பெண்களுக்கும் நீரிழிவு நோயை உருவாகலாம் என்று நீரிழிவு நோய்க்கான புதிய ஆராய்ச்சி ஒன்று காட்டுகிறது. இதில், 95 சதவீதத்திற்கும் மேலானோருக்கு ’டைப் 2’ நீரிழிவு நோயாக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய் ஆய்வுகளுக்கான ஐரோப்பிய அமைப்பின் இதழான ‘டையாபெட்டோலாஜியா’ இந்தியப் பெருநகரங்களில் நீரிழிவு நோயாளிகள் என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இதை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரம் மற்றும் முதன்மை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த ஷம்மி லுஹார் தலைமையில், இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த குழுவினர் தயாரித்துள்ளனர்.

இந்தியாவில் ஏற்கனவே நீரிழிவு நோய் பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்றும், 7.7 கோடி பெரியவர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும், 2045-ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட அந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக ஆகி 13.4 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கறுப்பின மற்றும் லத்தின் அமெரிக்க மக்களிடையே 50 சதவீததிற்கும் (20 வயதுடையவர்கள்) மேல் நீரிழிவு நோய்த் தாக்குதல் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் பாதிப்பானது, அதை ஒத்துப்போகும் படி உள்ளது என்று மேற்கோள்காட்டியுள்ளது.

அறிக்கையில், டாக்டர் லுஹார் என்பவர், “இந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையின் தாக்கமானது, இந்தியாவில் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைப்பிற்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் நீரிழிவு நோய் சிகிச்சைகளுக்கு நோயாளிகள் செலவழிக்கும் பணம் அதிகரிக்கும்.” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் நகரமயமாக்கல், உணவின் தரம் குறைதல் மற்றும் உடலுழைப்புக் குறைதல்  ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளதாக பட்டியளிட்டுள்ளது.

பொதுவாக, பெண்களுக்கு ஆயுட்காலத்திற்கு அதிக ஆபத்து இருப்பதாக அந்த ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. “நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் வயதுக்கு ஏற்ப குறைந்துவிட்டது. தற்போது நீரிழிவு நோய் இல்லாமல் 60 வயது நெருங்குபவர்களில், சுமார் 38 சதவீத பெண்களுக்கும், 28 சதவீத ஆண்களுக்கும் நீரிழிவு நோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. மேலும், உடல் பருமன் இதில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பெருநகரங்களில் 20 வயதிற்கு மேல் பருமனாக உள்ளவர்களில், 86 சதவீத பெண்களுக்கும், 87 சதவீத ஆண்களுக்கும் நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு  உள்ளது என்று ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

’50 சதவீத இந்தியர்களுக்கு நீரிழிவு நோய் வரலாம்’ – ஆய்வு அறிக்கையில் தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்