கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுகிறது என்றும் தொற்றை கட்டுப்படுத்திவிட்டதாக அதீத நம்பிக்கையில் உள்ளது என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நேற்று (பிப்ரவரி 16), வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த நான்கு பேருக்கு, தென் ஆப்பிரி்க்கா மற்றும் பிரேசிலில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றின் பாதிப்பு உள்ளதாக கண்டுபிடிப்பப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளதாக பிடிஐ தெரிவித்திருந்தது.
மீண்டும் மீண்டும் பரிணாமம் அடையும் கொரோனா நோய்க்கிருமி – தொடர் தடுப்பூசிகள் தேவை
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் டாக்டர் பால்ராம் பார்கவா, “இந்தியாவில், பிரேசிலில் பரவும் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா தொற்று ஒருவரையும், தென்னாப்பிரிக்காவில் பரவும் உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்று நான்கு பேரையும் பாதித்துள்ளது.” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 17) காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பால்ராம் பார்கவா பேசியதை சுட்டிக்காட்டி, கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு மெத்தனம் காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
GOI is being grossly negligent and over confident about Covid-19.
It’s not over yet. pic.twitter.com/W3FcSkS2JD
— Rahul Gandhi (@RahulGandhi) February 17, 2021
இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பதிந்துள்ள ராகுல் காந்தி, “மத்திய அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விஷயத்தில், முழுக்க முழுக்க மெத்தனமாக செயல்படுகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்திவிட்டதாக அதீதமான நம்பிக்கையில் இருக்கிறது. ஆனால், கொரோனா தொற்று பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.