கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்குச் செலுத்தப்படும் ரெம்டிசிவிர் வைரஸ் தடுப்பு மருந்து பயன்படுத்தப் படுவதை சட்டப்படி முறைப்படுத்த வேண்டுமென இந்திய மருத்துவக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள இந்திய மருத்துவக் கழகம் , கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உச்சத்தை அடைந்து வரும் சூழலில் ரெம்டிசிவிர் மருந்தைக் கள்ளத்தனமாகப் பதுக்குதல், தேவைப்படாத நோயாளிகளுக்குச் செலுத்தப்படுவல் போன்றவற்றால் ஏற்படும் பற்றாக்குறையால், பொது மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்படக்கூடும் என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாவை தடுக்க ரெம்தேசிவிர் மருந்தின் தேவை அதிகரிப்பு – ஏற்றுமதியை தடை செய்த மத்திய அரசு
மேலும் , ரெம்டிசிவிர் மருந்து பயன்படுத்தப் படுவதை சட்டப்படி முறைப்படுத்தாததால் பல இடங்களில் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகவும், சட்ட முறைப்படுத்துவதின் வாயிலாக மருத்துவர்களும் ,பொதுமக்களும் விழிப்புணர்வு அடைய இயலும் என்றும் மருத்துவக்கழகம் தெரிவித்துள்ளதாகஎன்.டி.டி.வி செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ரெம்டிசிவிர் வைரஸ் தடுப்ப மருந்து, லேசான பாதிப்படைந்தவர்களுக்கு செலுத்தப்பட அவசியமில்லை என்றும் மிதமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பயன்படுத்த வேண்டுமெனவும் இந்திய மருத்துவக் கழகம் அறிவுறுத்தியுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
கடந்த 2020 ஆண்டை விட தற்போது மிக குறைந்த விலையிலேயே ரெம்டிசிவிர் வைரஸ் தடுப்பு மருந்து அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் , தடுப்பு மருந்து அளவுக்கு மக்கள் முகக்கவசத்திற்கும், கொரனோ தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென இந்திய மருத்துவக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகஎன்.டி.டி.வி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரனோ தடுப்பு மருந்துகளாக கோவக்சின், கோவிஷீல்ட் பயன்படுத்தப்பட்டு வரும்நிலையில், நோய் எதிர்ப்பு திறனுக்காக ரெம்டிசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.