அலோபதி மருத்துவத்தை பாபா ராம்தேவ் முட்டாள்தனமான அறிவியல் என்று கூறியதை தொடர்ந்து, ஆயுர்வேத மருந்துவம் தொடர்பாக, ஊடகங்கள் முன்னிலையில் ஒரு விவாதத்தில் பங்கேற்குமாறு பாபா ராம்தேவ்விடம் இந்திய மருத்துவ சங்கத்தின் உத்தரகாண்ட் பிரிவு சவால் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, நேற்று (மே 28), இந்திய மருத்துவ சங்கத்தின் உத்தரகாண்ட் பிரிவு ராம்தேவ்விற்கு எழுதிய கடிதத்தில், “பதஞ்சலி யோக்பீத்திலிருந்து தகுதிவாய்ந்த மற்றும் முறையாக பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேதச்சார்யர்கள் (ஆயுர்வேத மருத்துவர்கள்) அடங்கிய குழுவை அமைக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இந்திய மருத்துவ சங்கத்தின் உத்தரகாண்ட் பிரிவின் சார்பாக, மருத்துவர்களின் குழு ஏற்கனவே மாநில அலுவலகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு குழுவிற்கிடையேயான விவாதம் நடக்கும்போது மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களால் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படட்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மேலே முன்மொழியப்பட்ட ஆரோக்கியமான விவாதத்திற்கான தேதி மற்றும் நேரத்தைத் தீர்மானிப்பது உங்கள் பொறுப்பாகும். இடத்தை நாங்கள் தேர்வு செய்கிறோம். இந்த விவாதமானது, கடந்த காலங்களில் அலோபாதி மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திற்கு இடையே இருந்த நல்லிணக்கத்தை மீண்டும் மீட்டெடுக்கும். ஆனால் இந்த இரண்டு நாட்களாக உங்களின் பொறுப்பற்ற, சுயநலம் நிறைந்த அறிக்கையால் அந்த நல்லிணக்கத்திற்கு தொந்தரவு ஏற்பட்டது.” என்று அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.
Source; newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.