Aran Sei

கோவாக்சின் தடுப்பு மருந்தின் செயல்திறன் தரவுகள் – இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என அறிவிப்பு

credits : the indian express

தராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம். இன்னும் இரண்டு வாரங்களில் கோவாக்சின் தடுப்பு மருந்தின், இடைக்கால செயல்திறனின் தரவுகளை  வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. கடந்த ஜனவரி 3 ஆம் தேதி, கோவாக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை முழுமையாக முடிவடைவதற்கு முன்னரே,  மத்திய மருந்து கட்டுப்பாட்டுக் கழகம் அந்த மருந்துககு அனுமதி வழங்கியிருந்தது. இது தொடர்பாக  பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி உட்பட பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு அனுமதி வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

கோவாக்சின் எடுத்துக்கொண்டவருக்கு “தீவிர” பிரச்சனை – ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

இந்நிலையில், கோவாக்சினின் செயல்திறன் பற்றிய இன்னும் இரண்டு வாரங்களில் இடைக்கால தகவல்கள் அடங்கிய தரவுகளை வெளியிட இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா கூறியுள்ளார்.

“பக்கவிளைவு ஏற்பட்டால் நிறுவனம் இழப்பீடு வழங்கும்” – கோவாக்சின் எடுத்தவர்களிடம் பெறப்பட்ட கையெழுத்து

இது தொடர்பாக பயோ ஆசியா உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், ”நாங்கள் மிகவும் வேகமாக பயணித்து கொண்டிருந்ததால், கோவாக்சினின் செயல்திறன் தரவுகளை (Efficacy Data) சமர்ப்பிக்கும் தேதியை கடந்து விட்டோம். இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை சேர்ந்தே செய்திருந்தால், முன்னரே செயல்திறன் தரவுகளை வெளியிட்டிருப்போம். எனினும், இன்னும் இரண்டு வாரங்களில் செயல்திறன் தரவுகள் வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளில் எது சிறந்தது?- உண்மையான அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

இதற்கிடையில், இதுவரை 3,81,305 பேருக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது என்றும் அதில் 580 பேர் கடுமையான பின்விளைவுகளை சந்தித்துள்ளனர் என்றும் நியூஸ்18 இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது

கோவாக்சின் தடுப்பு மருந்தின் செயல்திறன் தரவுகள் – இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என அறிவிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்