11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டியல் சாதி மாணவர்களுக்குப் பள்ளிப்படிப்பை முடிக்க உதவும், மத்திய அரசின் உதவித்தொகை திட்டம் 14க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான சர்ச்சை, ஏறக்குறைய ஓராண்டாக அமைச்சரவையில் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது என்றும் சமீபத்தில் பிரதமர் அலுவலகத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் ‘எக்னாமிக்ஸ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வு – அரசு ஆதரவுடன் சாதிக்கும் தெலங்கானா எஸ்சி, எஸ்டி மாணவர்கள் : நவநீத கண்ணன்
மேலும், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடனும் விரிவாக விவாதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த உதவித்தொகை திட்டத்தின் மூலம், சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீத உதவித்தொகையும், பட்டியல் சமூகத்தில் தகுதிவாய்ந்த மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 75 சதவீத உதவித்தொகையும் பெறுகிறார்கள்.
ஆனால், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மத்திய அரசின் இந்த உதவித்தொகை திட்டத்தில் 10 சதவீதம் மட்டுமே பெறுகிறார்கள் என்று ‘எக்னாமிக்ஸ் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக 2017-18 கல்வியாண்டில் பல மாநிலங்களில் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் மிகக் குறைந்த அளவிலேயே இந்தத் திட்டத்திற்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதனால், பல பட்டியல் சமூக மாணவர்கள் தங்கள் பள்ளி மேல் படிப்பைப் பாதியிலேயே கைவிடுகின்றனர் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம், இதற்கான நிதியைச் சில ஆண்டுகளாகப் பெருமளவு குறைத்துள்ளதால், இந்த நிதிச்சுமை முழுவதும் மாநில அரசுகளின் மேல் விழுகிறது என்றும் இதனால் கூடுதல் நிதிச்சுவை ஏற்படுவதாக மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்றும் எக்னாமிக்ஸ் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு சாத்தியமா? – சீ.நவநீத கண்ணன்
இது குறித்து, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுகன் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், “60 லட்சம் தலித் மாணவர்களுக்கான +1, +2 படிப்பிற்கான உதவித்தொகையை மோடி அரசு நிறுத்தியது. அவர்களின் கல்லூரிக் கனவைக் குழிதோண்டி புதைத்தது.” என்று விமர்சித்துள்ளார்.
மேலும், “பாஜக தலைவர் திரு.எல்.முருகன் என்ன சொல்ல போகிறார்? இந்த நிதியுதவி பெற்று முன்னேறியவர்களில் அவரும் ஒருவர்தானே? யாரை ஏமாற்ற வேல்யாத்திரை நடக்கிறது?” என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகனை நோக்கிக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
60 லட்சம் தலித் மாணவர்களுக்கான +1,+2 படிப்பிற்கான உதவித்தொகையை மோடி அரசு நிறுத்தியது. அவர்களின் கல்லூரி கனவை குழிதோண்டி புதைத்தது. பாஜக தலைவர் திரு.எல்.முருகன் என்ன சொல்ல போகிறார்? இந்த நிதியுதவி பெற்று முன்னேறியவர்களில் அவரும் ஒருவர்தானே? யாரை ஏமாற்ற வேல்யாத்திரை நடக்கிறது? pic.twitter.com/kpw6szYumX
— Thirumurugan Gandhi (@thiruja) November 27, 2020
பட்டியல் சமூக மாணவர்களுக்கான அகில இந்திய உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு ஆண்டுக்குச் சுமார் ரூபாய் 18,000 வழங்கப்படுகிறது. இதற்கு அந்த மாணவர் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.