Aran Sei

லக்கிம்பூர் கெரி விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு: பாஜக அமைச்சர் மகனுக்கு பிணை கிடைக்குமா?

க்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பிணை மனு மீதான உத்தரவை அலகாபாத் உயர் நீதிமன்றம் வெளியிடுகிறது.

நீதிபதி கிருஷ்ணா பஹல் அடங்கிய அமர்வு, விசாரணையை முடித்து ஜூலை 15ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.

கள்ளக்குறிச்சி விவகாரம்: சதி கும்பலுக்கு துணைபோகும் உளவுத்துறை – திருமாவளவன் குற்றச்சாட்டு

முன்னதாக, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை பிப்ரவரி 10, 2022 அன்று ஆஷிஷுக்கு பிணை வழங்கியது. பின்னர் உச்சநீதிமன்றம் பிணையை ரத்து செய்தது.  பாதிக்கப்பட்ட தரப்புக்கு போதுமான அவகாசம் அளித்த பிறகு அவரது பிணை மனுவை முடிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஆசிஷ் மிஸ்ராவின் பிணை மனுவை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரித்தது. இதற்கிடையில், கடந்த மே 9 அன்று, இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட  லவ்குஷ், அங்கித் தாஸ், சுமித் ஜெய்ஸ்வால் மற்றும் சிஷுபால் ஆகியோரின் பிணை மனுக்களை நீதிமன்றம் நிராகரித்தது.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் குற்றச் செயலில் ஈடுபட தீவிரமாக ஈடுபட்டுள்ளனர், எனவே இவர்கள் பிணை பெறத் தகுதியற்றவர்கள் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாதுகாப்புப் படையினர் 819 பேர் தற்கொலை – ஒன்றிய அரசு தகவல்

” குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் மற்றும் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட ஆஷிஷ் மிஸ்ராவும் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நீதியின் போக்கில் தலையிடுவார்கள். சாட்சியங்களை சிதைப்பார்கள்; சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்துவார்கள் என்று அரசுத் தரப்பு அச்சம் தெரிவித்தது. ,

கடந்த ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் உள்ள திகுனியாவில் ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

சேலம்: பிஎச்டி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் – பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது

குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வாகனம் போராடியவர்கள் மீது வாகனத்தை வேகமாக மோதியதில் நான்கு விவசாயிகள்,   பத்திரிகையாளர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.

Source: newindianexpress

லக்கிம்பூர் கெரி விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு: பாஜக அமைச்சர் மகனுக்கு பிணை கிடைக்குமா?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்