Aran Sei

கல்விச் சான்றிதழ்களுக்கு ஜிஎஸ்டி: ‘மாணவர் நலனில் அக்கறையின்றி வரி வசூலில் ஒன்றிய அரசு குறியாகவுள்ளது’- ஜவாஹிருல்லா

ல்விச் சான்றிதழ்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை விலக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டபேரவை உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, இன்று(நவம்பர் 26), பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம், இணைப்புக் கல்லூரி மாணவர்கள், தங்கள் கட்டணத்துடன் ஒவ்வொரு சேவைக்கும் ஜிஎஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரித்தொகை அரசுக்குச் செலுத்தப்படும். ஒவ்வொரு மாணவரும், பட்டப்படிப்பு முடித்துப் பட்டமளிப்பு சான்றிதழ் பெறுவதற்கு 18 சதவீதம் ஜிஎஎஸ்டி வரியைக் கட்டணத்துடன் கட்டாயம் செலுத்த வேண்டும்;

அசல் சான்றிதழ் இல்லாமல், பட்டச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் பிரதியான ‘டூப்ளிகேட்’ சான்றிதழ் பெறவும், ‘மைக்ரேஷன்’ என்ற இடமாற்றுச் சான்றிதழ், பருவத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெறுவது, சான்றிதழின் உண்மைத் தன்மை சரிபார்ப்புச் சான்றிதழ் ஆகியவற்றுக்கும் 18 சதவீதம் ஜிஎஎஸ்டி செலுத்த வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது.

கடும் நெருக்கடியான சூழலில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் தவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், சான்றிதழ்கள் மீதான ஜிஎஎஸ்டி வரி விதிப்பு மாணவ சமூகத்திற்குப் பெரும் சுமையாக மாறிவிட வாய்ப்புள்ளது. மாணவர் நலனில் அக்கறை காட்டாமல் வரி வசூலில் மட்டுமே குறியாக இருக்கும் ஒன்றிய அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பெறும் சான்றிதழுக்காக விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜிஎஎஸ்டி வரி விதிப்பை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கல்விச் சான்றிதழ்களுக்கு ஜிஎஸ்டி: ‘மாணவர் நலனில் அக்கறையின்றி வரி வசூலில் ஒன்றிய அரசு குறியாகவுள்ளது’- ஜவாஹிருல்லா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்