Aran Sei

உ.பி: தன் தாயை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை 30 வருடம் கழித்து கண்டுபிடித்த மகன் – நெஞ்சை உறைய வைக்கும் உண்மை சம்பவம்

த்தரபிரதேச மாநிலத்தில 30 வருசத்துக்கு முன்னாடி 12 வயசே ஆன சவிதாங்கிற ஒரு பெண் குழந்தை 6 மாசமா பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் இப்போ பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. இந்த கூட்டு பாலியல் வன்கொடுமைனால தன்னோட 13 வயசுலயே ஒரு அந்த ஆண் குழந்தையை சவிதா பெற்றெடுத்துருக்காங்க.

அப்படி சவிதாவுக்கு பிறந்த அந்த ஆண் குழந்தை தன்னோட DNA வை வைச்சி 30 வருசத்துக்கு அப்பறமா தன்னோட அம்மாவோட வாழ்க்கையை பாழாக்குன பாலியல் குற்றவாளிகளை பிடிச்சி கொடுத்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உறைய வைச்சிருக்கு.

1994 ஆம் வருஷம் உத்தரப்பிரதச மாநிலத்துல இருக்குற ஷாஜகான்பூர் மாவட்டத்துல உள்ள தன்னோட அக்கா வீட்டுல தங்கிட்டு இருந்த சவீதா அப்போ 7 ஆங் கிளாஸ் படிச்சுக்கிட்டு இருந்தாங்க

உ.பி: கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற பட்டியல் சமூக சிறுமி – காவல்நிலைத்தில் வைத்து வன்கொடுமை செய்த காவலர்

அந்த சமயத்துல சவீதாவோட அப்பா ஆர்மில இருந்தாரு. சவீதாவோட அக்கா டீச்சராவும், அவங்க ஹஸ்பண்ட் கவர்ன்மெண்ட் வேலையலையும் இருந்திருக்காங்க. அப்போ மே மாசம் லீவ்ல சவீதா வீட்டுல இருந்தப்ப 20 வயசான முகமது ரஸியும் 22 வயசான அவனோட அண்ணன் நக்கி ஹசனும் அங்க வந்திருக்காங்க.

அந்த ரெண்டு பேரும் சவீதாவோட காலையும் கையையும் கட்டி போட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை பண்ணியிருக்காங்க. அப்பறமா இந்த விஷயத்தை வெளிய யாருகிட்டயாவது சொன்னா உங்க அக்காவையும் அக்கா புருஷனையும் கொலை பண்ணிருவோம்னு அந்த ரெண்டு பேரும் மிரட்டியிருக்காங்க. அதனால இந்த விஷயத்தை சவீதா யாருகிட்டயும் அப்போ சொல்லல.

அப்பறமா 6 மாசமா அந்த ரெண்டு பேரும் சவீதாவை பலமுறை பாலியல் வன்புணர்வு பண்ணியிருக்காங்க. அந்த சமயத்துல தான் சவீதா வயசுக்கு வந்திருக்காங்க. சவீதா வயசுக்கு வந்தப்ப மட்டும் தான் அவங்க தன்னோட மாதவிடாய் ரத்தத்தை பாத்திருக்காங்க. அப்பறமா சவீதாவுக்கு பீரியட்ஸ் வரல.

உத்தரபிரதேசத்தில் பட்டியலின குடும்பத்தினர் படுகொலை – கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இளம் பெண்

அப்பறமா சவீதாவுக்கு உடம்பு சரியில்லாம போனதால அவங்களால படிப்பையும் தொடர முடியல. அந்த சமயத்துல அடிக்கடி சவீதா மயக்கம் போட்டு விழுந்ததால சவீதாவோட அக்கா அவரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருக்காங்க.

அப்போதான் சவீதா கர்ப்பமா இருக்குற விஷயம் அவங்க அக்காவுக்கு தெரிய வந்திருக்கு. அப்போ தான் தனக்கு நடந்த கொடுமையை பத்தி சவீதா தன்னோட அக்காகிட்ட சொல்லியிருக்காங்க.

அப்போ சவீதா 3 மாசம் கர்ப்பமா இருந்ததால அந்த சமயத்துல கருவை கலைச்சா, அது சவீதாவோட உயிருக்கு ஆபத்துனு டாக்டர் சொல்லியிருக்காங்க. அதோட இது சம்மதமா போலீஸ் கிட்ட கம்பளைண்ட் கொடுங்கன்னு டாக்டர் அவங்ககிட்ட அட்வைஸ் பண்ணியிருக்காங்க. ஆனா சவீதாவோட அக்கா போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கல. அதுக்கு பதிலா முகமது ரஸி, நக்கி ஹசனோட அம்மா அப்பாவை பாத்து நடந்த விஷயத்தை சவீதாவோட அக்கா சொல்லியிருக்காங்க.

ஆனா அவங்களோட அம்மா அப்பா அந்த விஷயத்தை நம்ம மறுத்துட்டாங்க. அன்னைக்கு நைட்டே ரஸியும் ஹசனும் ஒரு நாட்டுத் துப்பாக்கிய எடுத்துக்கிட்டு வந்து, சவீதாவோட அக்காவையும் அவரோட ஹஸ்பண்டையும் கொலை பண்ணிடுவோம்னு மிரட்டனதோட அவங்க வீட்டையும் எரிச்சிடுவோம்னு பயமுறுத்தியிருக்காங்க.

மகாராஷ்டிராவில் 8 மாதங்களாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி – 24 பேரைக் கைது செய்த காவல்துறையினர்

இதனால பயந்து போன சவீதாவும் அவரோட ஹஸ்பண்டும், சவீதாவை கூட்டிகிட்டு அந்த ஊரை விட்டு 160 KM தூரத்துல இருக்குற ராம்பூருக்கு போய்ட்டாங்க. அங்க இருந்து சவீதாவுக்கு பிரசவம் நடக்குற வரை தன்னோட குடும்பத்துக்கு இந்த விஷயத்தை பத்தி சவீதாவோட அக்கா சொல்லவே இல்லை.

அப்பறமா பிரசவம் நடந்த பின்னாடி இந்த விஷயம் சவீதாவோட குடும்பத்துக்கு தெரிய வந்திருக்கு. இந்த விஷயம் தெரிஞ்சதும் சவீதாவோட அப்பா பயங்கரமா கோவப்பட்டிருக்காரு. எங்க குடும்ப மானமே போச்சு. எங்க கிராமம் முழுக்க இந்த விஷயம் தெரிஞ்சிடுச்சு. இனிமே எங்களோட கிராமத்துக்கு போகவே முடியாதுனு சவீதாவோட அம்மா வேதனை பட்டியிருக்காங்க.

சவீதாவுக்கு பிறந்த குழந்தையை சவீதாகிட்டயே காட்டாம அவங்க சொந்தக்காரர் ஒருத்தர்கிட்ட வளர்க்கறதுக்கு அவங்க அக்கா கொடுத்து விட்டாங்க. சொல்ல போனா சவீதாவுக்கு தனக்கு ஆண் குழந்தை பொறந்துச்சா இல்ல பெண் குழந்தை பொறந்துச்சா, இல்ல அந்த குழந்தை உசுரோடதான் இருக்கா இல்ல இறந்துடுச்சானு கூட அப்போ சவீதாவுக்கு தெரியல.

தனக்கு இப்படி ஒரு கொடுமை நடந்ததை பத்தியோ அதனால ஒரு குழந்தை பொறந்ததை பத்தியோ நா மறந்துடனும். இல்லைனா என்னைய யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்கனு சவீதாகிட்ட அவங்க அக்கா சொல்லியிருக்காங்க.

டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலின சிறுமி – நீதி கோரும் திரைக்கலைஞர்கள்

அப்பறமா ஸ்கூலுக்கு போயி படிப்பை தொடர்ந்த சவீதா 10 ஆவது படிச்சி முடிச்சாங்க. அப்பறமா 18 வயசு ஆனதும் அவங்க குடும்பம் சவீதாவுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருக்காங்க. சவீதாவுக்கு கல்யாணம் ஆனதால சவீதாவால தன்னோட படிப்பை தொடர முடியல.

2002 ஆம் வருஷம் சவீதாவுக்கு ஒரு ஆண் குழந்தை பொறந்துச்சு. அதுக்கு அப்பறமா சவீதாவோட வாழ்க்கையில சந்தோசம் கிடைச்சது. ஆனா சந்தோசம் ரொம்ப நாள் நீடிக்கல.

2006 ஆம் வருஷம் சவீதாவோட கிராமத்தை சேர்ந்தவங்களால சவீதாவோட கடந்த கால கசப்பான அனுபவங்களை அவளோட ஹஸ்பண்ட் தெரிஞ்சிக்கிட்டாரு.

இந்த விஷயம் தெரிஞ்சதால கோவமான சவீதாவோட ஹஸ்பண்ட் சவீதாவையும் அவங்களோட 4 வயசு குழந்தையையும் சேர்த்து வீட்டை விட்டு வெளிய அனுப்பிட்டாரு.

சவீதாவும் தன்னோட குழந்தையை தூக்கிகிட்டு ராம்பூருல இருந்து லக்னோவுக்கு போயிருக்காங்க. லக்னோல சின்ன சின்ன வேலை செஞ்சி தன்னோட வாழ்க்கையை சவீதா நடத்தியிருக்காங்க.

அந்த சமயத்துல தான் 2007 ஆம் வருஷம் சவீதாவோட வீட்டு கதவை ஒரு 13 வயசு பையன் ஒருத்தன் தட்டியிருக்கான். அந்த பையனை யாருனு சவீதா விசாரிச்சப்பத்தான் அவன் தன்னோட மூத்த பையன்னு சவீதாவுக்கு தெரிய வந்திருக்கு. ஒரு வழியா சவீதாவோட மூத்த பையன் ராஜு தன்னோட அம்மாகிட்ட வந்து சேர்ந்துட்டான்.

ராஜஸ்தான்: ஆதிக்கச் சாதியினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியல் சாதி பெண்

ராஜு தன்னோட அம்மாவை கண்டுபிடிச்சது ஒன்னும் சாதாரணமா நடக்கல. சவீதாவோட கிராமத்துல இருந்த அவங்களோட சொந்தக்காரன் கிட்ட ராஜுவை வளக்கறதுக்காக சவீதாவோட அக்கா ஒப்படைச்சிருக்காங்க.

ஆனா அந்த சொந்தக்காரர் அப்பறமா கல்யாணம் பண்ணிக்கிட்டு தனக்குனு ஒரு குழந்தை பொறந்த பின்னாடி ராஜூவை தொடந்து துன்புறுத்த ஆரம்பிச்சிருக்காரு. அதோட கிராமத்துல இருக்குற ஒவ்வொரு பசங்களும் ராஜுவோட பொறப்பை வைச்சி அவனை கிண்டல் பண்ணி துன்புறுத்த ஆரம்பிச்சிருக்காங்க.

அந்த சமயத்துல தான் சவீதா தன்னோட ஹஸ்பண்ட விட்டு பிரிஞ்சு செய்தியை கேள்விப்பட்டதும் ராஜூவை அவங்க அம்மாகிட்டயே அந்த சொந்தக்காரர் அனுப்பி வுட்டுருக்காரு.

அப்பறமா தொடர்ந்து படிக்க ஆரம்பிச்ச சவீதா 12 வது முடிச்ச கையோட BA பாலிடிக்ஸ் படிச்சி முடிச்சி டிகிரியும் வாங்குனாங்க. படிப்பு மட்டுந்தான் சவீதாவ இத்தனை கொடுமையில இருந்தும் ஓரளவுக்காவது காப்பாத்தியிருக்கு.

விருதுநகர்: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலின பெண்ணிடம் சிபிசிஐடி விசாரணை

ராஜு தன்னோட அம்மாகிட்ட வந்ததுல இருந்தே தன்னோட அப்பா பத்தி கேட்டுகிட்டே இருப்பான். ஆனா சவீதா அந்த விஷயம் தன்னோட பையனுக்கு தெரிய கூடாதுனு மறைச்சிகிட்டே வந்தாங்க. ஆனா ராஜு தன்னோட அப்பா பத்தி தெரியல்னா தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்டனத்துக்கு அப்பறமாத்தான் சவீதா தனக்கு நடந்த கொடுமையை படுத்தி தன்னோட பையன்கிட்ட சொல்லியிருக்காங்க.

2019 ஆம் வருஷம் இத தெரிஞ்சிகிட்ட ராஜு தன்னோட அம்மாகிட்ட இத பத்தி போலீஸ் கிட்ட கம்பளைன்ட் கொடுக்கணும்னு வற்புறுத்தியிருக்கான். ஆனா இப்போ இத பத்தி கம்பளைண்ட் கொடுத்தா ஊரு என்ன பேசும், சொந்த காரங்க என்ன நினைப்பாங்கனு சவீதா கம்பளைண்ட் கொடுக்க யோசிச்சிருக்காங்க. நாம கஷ்டப்படறப்ப எந்த ஹெல்ப்பும் பண்ணாத சொந்தக்காரங்களை நெனைச்சி நீ ஏன்மா கவலை படுறனு ராஜு ஆறுதல் சொன்ன பின்னாடிதான் சவீதா இது சம்பந்தமா போலீஸ் கிட்ட கம்பளைண்ட் கொடுத்தியிருக்காங்க.

ஆனா போலீஸ் இந்த கேஸ் ரொம்பவே பழசுன்னு இத எடுத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஆனா ராஜு கோர்ட் வரைக்கும் போயி இந்த கேஸை எடுத்துக்க வைச்சிருக்காரு.

2021 ஆம் வருஷம் ஜூன் மாசம் 28 வயசான முகமது ரஸியையும் 51 வயசான அவனோட அண்ணனான நக்கி ஹசனோட DNA மாதிரியை சோதனைக்காக போலீஸ் எடுத்துருக்காங்க. அப்பறமா ராஜுவோட DNA வை சோதிச்சி பாத்ததுல நக்கி ஹசனோட DNA வோட ராஜுவோட DNA பொருந்தி போயிருக்கு.

ஆனா அந்த சமயத்துல இத தெரிஞ்சிகிட்ட முகமது ரஸியும், நக்கி ஹசனும் தலைமறைவாகிட்டாங்க. அப்பறமா அவங்களை வலை வீசி தேடிகிட்டு வந்த போலீஸ் இந்த ஆகஸ்ட் மாசம் ஹைதராபாத்ல வைச்சி ரெண்டு போரையும் அரெஸ்ட் பண்ணியிருக்காங்க.

உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் மீது கொலை முயற்சி – பாஜக முன்னாள் எம்எல்ஏ விடுதலை

இந்த விஷயம் பத்தி பேசுன சவீதா, இப்போ நான் நிம்மதி, சோர்வு, சோகம், மகிழ்ச்சி, கோபம்னு எல்லா உணர்ச்சிகளையும் ஒரே நேரத்துல பீல் பண்ணுறேன். என்னோட வாழ்க்கைய நாசமாக்குன அந்த ரெண்டு போரையும் ஒரு தடவை நேருல பாத்து அவங்களுக்கு ஒரு அரை கொடுக்கணும்னு ஆசை படுறேன்னு சவீதா சொல்லியிருக்காங்க.

நான் என்னோட உரிமைக்காக போராடுறேன். இதனால என்னைய பத்தி யாரு என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை. என்னோட கதை என்னைய மாதிரி பாதிக்கப்பட்ட பொண்ணுங்களுக்கும் இத பத்தி வெளிய பேசறதுக்கான தைரியத்தை கொடுக்கணும்னு நம்புறேன்னு சவீதா சொல்லியிருக்காங்க.

Source : newslaundry

அதானி அம்பானிக்கு குடைபிடிக்கும் மோடி | PTR அதிரடி | PTR Palanivel Thiyagarajan Speech | BJP | Modi

உ.பி: தன் தாயை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை 30 வருடம் கழித்து கண்டுபிடித்த மகன் – நெஞ்சை உறைய வைக்கும் உண்மை சம்பவம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்