Aran Sei

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொடூரமான செயல்: 17 காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு போராடிய மக்களின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது கொடூரமான செயல் என்று இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

குருவிகளைப் போல் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். காவல்துறையினர் ஒளிந்து கொண்டு தப்பித்து ஓடியவர்களையும் சுட்டு படுகொலை செய்துள்ளனர். இது தொடர்பாக 17 காவல்துறையினர் து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

‘தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு நடப்பதை விரும்பவில்லை’ : ஸ்டெர்லைட்டின் மனுவிற்கு தமிழக அரசு பதில்

தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 2018 ஆம் ஆண்டில் பொதுமக்கள் தன்னெழுச்சியான போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிய கிராமங்கள் பல நாட்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்தன.

இத்தொடர் போராட்டங்களின் 100-வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பிரமாண்ட பேரணியை பொதுமக்கள் நடத்தினர். 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தூத்துக்குடியில் 2018, மே 22-ம் தேதி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 வயது பள்ளி மாணவி ஸ்னோலின் ஜாக்சன் உட்பட மொத்தம் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். 2018 மே 23 முதல் மே 28, வரை தூத்துக்குடி மாவட்டத்தில் இணையம் முடக்கப்பட்டது. தமிழ்நாட்டில் முதல்முறையாக அப்பொழுதுதான் இணையம் முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெர்லைட்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 4-ம் ஆண்டு நினைவு தினம் – அஞ்சலி செலுத்த சென்ற 50 பேர் கைது

தமிழ்நாட்டையே குலுக்கிய இந்த கோரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2018-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி விசாரணை தொடங்கியது. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணை சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த ஆண்டு மே மாதம் இடைக்கால அறிக்கை வழங்கப்பட்டது.பின்னர் கடந்த மே மாதம் முழுமையான அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு வழங்கியது.

அந்த அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. கான்ஸ்டபிள் மணிகண்டன் என்ற ஒரே ஒரு காவலருக்கு மட்டுமே படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தவிர சிறு காயம் மற்றும் வீக்கங்களை தவிர காவல்துறை தரப்பில் எந்த இழப்பும் இல்லை. காவல்துறையினர் நினைத்திருந்தால் போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வராமல் தடுத்திருக்கலாம்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் நினைவாக இணைய அருங்காட்சியகம் – உருவாக்கிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர்

பொதுமக்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் எதுவும் இல்லா போதும் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதுவும் கலைந்து ஓடிய போராட்டக்காரர்களை குறிவைத்தும் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சில காவல்துறையினர் ஒளிந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டனர். பொதுமக்களை குருவிகளைப் போல காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகள் எந்த திசையிலிருந்து வருகிறது என்றே தெரியாமல் போராட்டக்காரரர்கள் சிதறி ஓடினர். காவல்துறையினரின் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது குரூரமான செயல்.

காவல்துறையினர் இடுப்புக்கு கீழோ அல்லது காலை குறிவைத்தோ சுடவில்லை. கண்மூடித்தனமாக மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். உயர் அதிகாரிக்கு தெரியப்படுத்தாமல் காவல்துறையினர் தன்னிச்சையாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேர்ட் மைல், ரவுண்டானா, ரெரேஸ்புரம் ஆகிய நான்கு இடத்தில் காவலர் சுடலைக்கண்ணு தானியங்கி துப்பாக்கியால் 17 ரவுண்டுகள் சுட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்டம்: ‘வழக்குகள் வாபஸ்; கைதான 93 நபர்களுக்கு நிவாரணம்’ – தமிழக அரசு அறிவிப்பு

அதிமுக அரசும், நடிகர் ரஜினிகாந்தும் கூறியதுபோல் கலவரத்திற்கு ஒரு குறிப்பிட்ட அமைப்போ, சில குறிப்பிட்ட நபர்களோ காரணம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்த உடனுக்குடன் அனுமதி பெறுவதற்காக வருவாய்த் துறையினர் 3 பேரை முக்கிய இடங்களில் தங்களோடே வைத்திருந்தனர்.

மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ், பொறுப்பற்ற, மோசமான, அலட்சியமான மற்றும் தவறான முடிவுகளை எடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர், போராட்டம் நடந்த நாளில் தலைமையகமான தூத்துக்குடியில் இல்லாமல், 100கி.மீ தொலைவில் உள்ள கோவில்பட்டியில் இருந்துள்ளார். அவர் மீது அரசு துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு காரணமான தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாகவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமாகவும் உயர்த்துமாறு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜஸ்டின் செல்வா மிதேஷ் என்பவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அவரது தாயாருக்கு அரசாங்க பதவி வழங்கப்பட வேண்டும். காயமடைந்த கான்ஸ்டபிள் மணிகண்டனின் மருத்துவச் செலவுகளை கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

Source : frontline.thehindu

சங்கிகள் வீசிய செருப்பை திருப்பி விட்டெறிந்த PTR | Aransei Roast | Modi | India Today Debate | BJP

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொடூரமான செயல்: 17 காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்