Aran Sei

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் டி.பி.ஜெயின் கல்லூரி: மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்காமல் வஞ்சிப்பதாக இந்திய மாணவர் சங்கம் குற்றச்சாட்டு

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி. ஜெயின் கலை அறிவியல் கல்லூரியில் உள்ள அரசு உதவி பெறும் பிரிவில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கல்லூரி நிர்வாகம் மாணவர் சேர்க்கையை நடத்துவதாக கூறிக்கொண்டு அதற்கான விண்ணப்பங்கள் வழங்காமல் மாணவர்களை ஏமாற்றுவதாக இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

டி.பி. ஜெயின் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த 2 கல்வியாண்டுகளாக மாணவர் சேர்க்கை நடத்தாமல், அரசு உதவி பெரும் பிரிவை சுயநிதி கல்லூரியாக மாற்ற திட்டமிட்டு வருவதாக பேராசிரியர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் குற்றம் சாட்டியிருந்தனர். ஆகவே அக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்காக சென்னை, கே.சி.எஸ்.காசி நாடார் கல்லூரியின் பொருளியல் உதவிப் பேராசிரியர் முனைவர் சந்தோஷ் டி.சுரானா என்பவரை தனி அலுவலராக தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது.

சென்னை: தனியார் கல்லூரியாக மாறும் அரசு உதவி பெறும் டி.பி.ஜெயின் கலை அறிவியல் கல்லூரி – தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா?

தனி அலுவலரை நியமனம் செய்தும், மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை நடத்தாமல் கல்லூரி நிர்வாகம் இழுத்தடித்ததுள்ளது. இந்நிலையில் இந்த தனி அலுவலர் நியமனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்லூரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் விசாரணையில் தனி அலுவலரின் நியமனம் செல்லாது என்றும், கல்லூரி நிர்வாகமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்குவதற்கான இறுதி தேதியை குறிப்பிடாமல், மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் மாணவர்களுக்கோ விண்ணப்பங்கள் வழங்காமல், அவர்களின் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட படிவங்களின் நகல்களை மட்டும் வாங்கி வைத்துக் கொள்வதால் விண்ணப்பிக்க வந்துள்ள மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அரசு உதவி பெரும் கல்லூரி பிரிவை சுயநிதி கல்லூரியாக மாற்றும் கல்லூரியினுடைய சதித்திட்டத்தின் விளைவாகத்தான் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படாமல் உள்ளது என்று இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டுகிறது. மேலும் நாங்கள் தன்னாட்சி பெற்ற கல்லூரி என்றும், உயர்நீதிமன்ற உத்தரவை எடுத்துக் காட்டியும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்காத தங்களது நடவடிக்கையை கல்லூரி நிர்வாகம் நியாயப்படுத்தி கொள்கிறது என்று இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கல்வியும் தனியார்மயமும்  – பேரா. A.P. அருண்கண்ணன்

இது தொடர்பாக கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் முறையிட்டுள்ளதாகவும், அவரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாக இந்திய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

முறையாக விண்ணப்பங்கள் வழங்கி நியாயமான முறையில் டி.பி. ஜெயின் கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென்று இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி. ஜெயின் கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டுதோறும் சராசரியாக 1000 மாணவர்கள் சேர்ந்து படிக்கும் அரசு உதவி பெறும் பிரிவில் உள்ள 7 இளங்கலை 3 முதுகலை பாடப்பிரிவுகளை நிரந்தரமாக மூட கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி. ஜெயின் கலை அறிவியல் கல்லூரி 1972 ஆம் ஆண்டு துவங்கபட்டது. கடந்த 50 ஆண்டுகளாக இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. 1990 ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகள் சுயநிதி பிரிவை தனியாக துவங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

சென்னை: டி.பி.ஜெயின் கல்லூரியியை நிர்வகிக்க தனி அலுவலரை நியமித்தது தமிழ்நாடு அரசு

அதன் அடிப்படையில் இக்கல்லூரியில் மேலே கூறப்பட்ட 10 பாடப் பிரிவுகளுடன் சுயநிதி பிரிவில் மேலும் 10 பாடங்களை இக்கல்லூரி நிர்வாகம் நடத்துகிறது. இந்த சுயநிதி பிரிவில் ஆண்டுதோறும் 1500 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் அரசு உதவி பெறும் பிரிவை காட்டிலும் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதாவது அரசு உதவி பெறும் பிரிவில் வருடத்திற்கு சுமார் 1000 ரூபாய் வரைதான் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சுயநிதி பிரிவில் சுமார் 42000 ரூபாய் ஆண்டு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சென்னை நகரத்திலிருந்து மறுகுடியமர்வு செய்யப்பட்ட செம்மஞ்சேரி, கண்ணகி நகர், எழில் நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் இக்கல்லூரியின் அரசு உதவி பெறும் பிரிவுதான் மிக முக்கிய காரணம் என்று அக்கல்லூரியின் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பிரிவில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி, சுயநிதி பிரிவுக்கு இணையான 40000 ரூபாய்க்கும் அதிகமான கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் வசூலித்து வருகிறது.

இலயோலா கல்லூரியில் ஒரே நாடு, ஒரே மொழி கருத்தரங்கம் – இந்தியைத் திணிப்பதற்கான ஒன்றிய அரசின் திட்டமா இது?

2003 க்கு பிறகு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெறும் பிரிவில் பணி நிறைவு பெரும் பேராசிரியர்களின் இடத்தில் புதிய பேராசிரியர்களை நியமிப்பதையும் கல்லூரி நிர்வாகம் நிறுத்தி விட்டது.

இப்படி அரசின் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகளையும், சுயநிதி கல்லூரிக்கு பிரிவிற்கு அரசு உதவி பெறும் பிரிவில் அதிக கட்டணம் வசூலித்ததை கண்டித்த 11 பேராசிரியர்களை 2 ஆண்டுகளுக்கு முன்பாக சட்டவிரோதமாக கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. தங்களின் பணிநீக்கத்திற்கு எதிராக பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் என்ற சங்கத்தின் கீழ் பேராசிரியர்கள் போராடி வருகின்றனர்.

சொல்லப்போனால் 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு உதவி பெரும் கல்லூரியின் பிரிவு முழுவதுமாய் சுயநிதி கல்லூரி பிரிவாக செயல்பட்டு வந்துள்ளது. இதில் அரசு உதவி பெரும் பிரிவில் உள்ள மாணவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்திய பிறகு, சுயநிதி கல்லூரி பிரிவில் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையான கட்டணத்தை கல்லூரி முதல்வரின் வங்கிக் கணக்கிற்கு சட்ட விரோதமாக செலுத்த மாணவர்கள் கட்டாயப் படுத்தப்பட்டனர் என்று அந்த கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்தகைய அதிக கட்டண கொள்ளையால் அரசு உதவி பெரும் பாடப்பிரிவுகளிலிருந்து எண்ணற்ற ஏழை எளிய மாணவர்கள் தங்களது படிப்புகளை கைவிட்டனர். இத்தகைய கட்டண கொள்ளையிலும் சிலர் வேறு வழியின்றி கடன் வாங்கி தங்களது படிப்பை தொடர்ந்தனர்.

இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பிரிவில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி, சுயநிதி பிரிவுக்கு இணையான 40000 ரூபாய்க்கும் அதிகமான கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் வசூலித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2020-2021 மற்றும் 2021-2022 ஆகிய இரண்டு கல்வி ஆண்டுகளில் அரசு உதவி பெறும் பிரிவில் மாணவர் சேர்க்கையை முற்றிலுமாக கல்லூரி நிர்வாகம் நிறுத்தி விட்டது. ஆகவே இந்தாண்டு கண்டிப்பாக மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மதிக்காமல் தன்னிச்சையாக கல்லூரி நிர்வாகம் செயல்பட்டு வருவதாக இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மூஞ்சிய பாத்தே சாதிய கண்டுபிடிப்பேன் | பேராசிரியர் அனுராதாவின் அதிசய திறமை | Aransei Roast | Periyar

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் டி.பி.ஜெயின் கல்லூரி: மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்காமல் வஞ்சிப்பதாக இந்திய மாணவர் சங்கம் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்