Aran Sei

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: கடந்த ஓராண்டில் பாஜக தலைவர்கள் பேசிய இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களின் விரிவான பட்டியல்

பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களான நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரின் இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளுக்கு பன்னாட்டு அளவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எழுந்து வரும் எதிர்ப்புக்கு நடுவில், ஒன்றிய அரசு சர்ச்சையில் இருந்து விலகி இருக்க துடித்து வருகிறது.

வளைகுடா நாடுகளில் நபிகள் நாயகம் பற்றி பாஜக நிர்வாகிகள் பேசிய கருத்திற்கான எதிர்வினை கிளம்பியவுடன் உடனடியாக கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் “விளிம்புநிலைக் கூறுகளால் (FRINGE ELEMENTS)” செய்யப்பட்டவை என்றும், அது எந்த வகையிலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா: ஹிஜாப்பை தொடர்ந்து தொப்பி அணிய தடை கேட்கும் வலதுசாரிகள்

பாஜக தனது சொந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில், வளைகுடா நாடுகளிலிருந்து வரும் சேதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், இஸ்லாமிய விரோத நோக்கத்திற்கான உண்மையான மறுப்பு அதனிடம் இல்லை. ஒரு இஸ்லாமிய வெறுப்பு உறுப்பினர் தன் அணியில் இருப்பதற்கு எந்த சட்டப்பூர்வ பொறுப்பும் இல்லாமல், அந்த உணர்விலிருந்துத் தன்னைத் தூர விலக்கிக் கொள்ள முயல்கிறது – எல்லாவற்றிற்கும் மேலாக, ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் எப்படி “விளிம்புநிலை கூறு” களாக இருக்க முடியும்? இறுதியாக, நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டாலின் கருத்துக்களைக் குறிப்பிடுவதை அது முற்றிலும் தவிர்த்தது.

எவ்வாறாயினும், பன்னாட்டு அழுத்தங்களால் அரசாங்கத்தின் அறிக்கை அதன் இரட்டை நாக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரிடம் மட்டுமல்ல. அவை பாஜக மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களால் எவ்வித குற்ற உணர்ச்சியுமின்றி, தண்டனையிலிருந்து தப்பி தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

“லவ் ஜிகாத்” சட்டங்களும் வன்முறை வெறுப்புப் பிரச்சாரமும் – ஒரு விரிவான பார்வை

கடந்த ஆண்டில் மட்டும், பாஜக உறுப்பினர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கருத்து தெரிவித்த பத்து நிகழ்வுகள் இதோ:

  1. யோகி ஆதித்யநாத்: இஸ்லாமியர்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான குறியீட்டுப் பேச்சுக்கள்

கடந்த இரண்டு உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தல்களில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் முக்கிய பிரச்சார திட்டங்களில் முதலிடம் பெற்ற ஒன்று இஸ்லாமிய விரோத வெறுப்பையும், பிரிவினையையும் தூண்டுவதாகும். தி வயர் அவரது பொதுவில் கிடைக்கக்கூடிய 34 பேச்சுகளை ஆழமாக பகுப்பாய்வு செய்து, அவர் பேசிய வெறுப்புப் பேச்சை அம்பலப்படுத்தியுள்ளது.

தன் தொண்டர்களுக்கான ரகசிய அறிவிப்புகள் தவிர – இஸ்லாமியர்களை இழிவாகப் பேசும் போது ‘அப்பா ஜான்’ என்று குறிப்பிடுபவர்களை குற்றவாளிகள் (அப்ராதியோன்), மாஃபியாக்கள் மற்றும் கலகக்காரர்கள் போன்ற அடைமொழிகளைப் பயன்படுத்தி – தொடர்ந்து அவர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

இஸ்லாமியர்களை “தாலிபான்கள்” என்று குறிப்பிட்டு, ” தாலிபான்கள் இங்கு உருவாவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மேலும், தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் அரசு வலிமையுடன் தடுத்து நிறுத்தும்,” என்று அவர் அறிவித்தார்.

“கலவரக்காரர்களுக்கு” எதிராக ‘புல்டோசர்’ பயன்படுத்தப்படுவதைப் பற்றி அவர் பேசும்போது, இஸ்லாமியர்களுக்கு எதிராக அரச படையைப் பயன்படுத்துவதைப் பற்றி அவர் பலமுறை பேசியுள்ளார் – இது ஒரு வெறும் சொல்லாடல் அல்ல. ஒரு நீண்ட கால நேரடியான செயல்திட்டமாகும். நாம் கண்டபடி இங்கே அங்கே என்று இது மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2. பாஜக தொண்டர் தினேஷ் குஷ்வாஹா இஸ்லாமியர் என நினைத்து ஒருவரை தாக்கியுள்ளார்

2022 மே மாதம், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பவர்லால் ஜெயின் என்ற அறிவாற்றல் குறைபாடுள்ள 65 வயது முதியவர், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரை வழி தவறிவிட்டார். பிறகு மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் இறந்து கிடந்த அவரது உடல் மீட்கப்பட்டது.

இதற்கிடையில், பாஜக பிரமுகரான தினேஷ் குஷ்வாஹா, அந்த நபரிடம் பெயரைக் கேட்டு அவரைத் தாக்கும் காணொளி வைரலானது.

காணொளியில், பாஜக தொண்டர், “ உங்கள் பெயர் என்ன? முகமதுதானே? உங்கள் ஆதார் அட்டையைக் காட்டுங்கள், ” என்று கேட்டுள்ளார்.

அந்த ஒரு நிமிட காணொளியில், குஷ்வாஹா இடைவிடாமல் ஜெயினை அடிப்பதைக் காணலாம். மறுநாள் காலை ஜெயின் இறந்து கிடந்தார்.

’தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை’: திரைக்கலைஞர் நசிருதீன் ஷா கருத்து

நீமுச் மாவட்ட பாஜகவின் மாவட்டத் தலைவர், குஷ்வாஹா பாஜகவில் உறுப்பினராக இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும் அவரது மனைவி பாஜக முன்னாள் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் என காவல்துறை கூறியுள்ளது.

3. ‘இஸ்லாமியர்களைத் தீயிட்டு கொளுத்த வேண்டும்’: ஹரிபூஷன் தாக்கூர் பச்சால்

தசரா பண்டிகையின் போது இந்துக்கள் ராவணன் உருவ பொம்மையை எரிப்பது போல் இஸ்லாமியர்களையும் தீ வைத்துக் கொளுத்த வேண்டும் என்று பீகார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஹரிபூஷன் தாக்கூர் பச்சால் ஒரு மாதத்திற்கு முன்பே கூறினார்.

முன்னதாக, பிப்ரவரி 2022 இல், பாஜக சட்டமன்ற உறுப்பினர், “இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும் என்றும், இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட வேண்டும்,” என்று கூறினார்.

தர்ம சன்சத்: ‘இந்து ராஷ்டிரத்தை உருவாக்க கொலையும் செய்யலாம் என பேசுவது வெறுப்பு பேச்சுதான்’ – வழக்கு பதிந்த டெல்லி காவல்துறை

4. ஹரித்வார் தர்ம சன்சத்தில் அஷ்வினி உபாத்யாயின் முழக்கம்

ஆகஸ்ட் 10, 2021 அன்று, டெல்லி ஜந்தர் மந்தரில், பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக நடந்த பேரணியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான முழக்கங்களில் ஈடுபட்டதற்காக பாஜக தலைவரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் கைது செய்யப்பட்டார்.

அந்த பேரணியில் இஸ்லாமியர்களை கொலை செய்ய வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. உபாத்யாய் முழக்கங்களை எழுப்பியவர்களுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தன்னை வேண்டுமென்றே கைது செய்ததாகவும் பின்னர் வாதாடினார்.

இருப்பினும், நவம்பர் 2021 இல், ‘எச்சில் ஜிகாத்’ என்ற கற்பனைத் தொடரில் பங்கு பெற்ற அவர், ” இந்த எச்சில் ஜிஹாதிகளுக்கு அவர்களது பெற்றோர்களோ அல்லது அவர்களுடைய பள்ளியிலோ இவற்றை எல்லாம் கற்றுத் தருகிறார்கள்” (இஸ்லாமியர்கள் எச்சிலைத் துப்பி உணவுப் பொருட்களை விற்பதாகவும், எனவே இஸ்லாமியர்கள் விற்கும் பொருட்களை வாங்காதீர்கள் எனவும் இந்து ராஷ்ட்ர கட்சியைச் சேர்ந்த ஒரு இந்துத்துவா தீவிரவாதி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டான். இதுதான் எச்சில் ஜிகாத் என பரப்பப்பட்டது.)

“இஸ்லாமிய ஆண்கள் அவர்கள் தயாரிக்கும் உணவில் மற்ற உடல் திரவங்களைக் கூட கலக்கலாம்,” என்றும் அவர் கூறியதாக நியூஸ்லாண்ட்ரி தெரிவித்துள்ளது.

இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்ற எந்த தியாகமும் செய்ய தயார் – சுதர்சன் டி.வி உரிமையாளர் சுரேஷ் சவாங்கே உறுதிமொழி

ஒரு மாதத்திற்குப் பிறகு 2021 டிசம்பரில், ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சத்தில், அஸ்வினி உபாத்யாய் முன்னிலையில் இருந்தார். இந்த கூட்டத்தில், மியான்மரில் ரோஹிங்கியாக்களைப் படுகொலை செய்தது போல இந்திய இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்வதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டன. இஸ்லாமியர்களை பெருமளவில் படுகொலை செய்வதற்கான வெளிப்படையான அழைப்பும் அந்த வெறுப்பு உரையில் அடங்கும்.

“எங்களில் 100 பேர் 20 லட்சம் பேரை (இஸ்லாமியர்கள்) கொல்லத் தயாராக இருக்கிறோம். அதில் வெற்றி பெற்று, நாங்கள் சிறை செல்வோம்,” என்று பூஜா ஷகுன் பாண்டே கூறினார்.

இந்து மதத்திற்கு ‘எந்த வகையிலும்’ அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அனைவருக்கும் எதிராக ” இந்துக்களைப் பாதுகாக்க” அழைப்பு விடுக்கும் உறுதிமொழியுடன் நிகழ்வு நிறைவுற்றது.

5. தர்ம சன்சத்தில் பாஜக மகளிர் அணித் தலைவி உதிதா தியாகி

பாஜக மகளிர் அணித் தலைவி உதிதா தியாகி, இனப்படுகொலை அழைப்பு விடுக்கப்பட்ட தர்ம சன்சத்தில் கலந்து கொண்டார். ஆனால் அவர் அதில் இணைந்திருப்பது இது முதல் முறை அல்ல. ‘அரசியல் செய்யுங்கள்’ என்ற சேனல் ஒன்றின் நேர்காணலில், அவர் கலந்து கொண்டு, யதி நரசிங்கானந்திற்கு ஆதரவாக உறுதிமொழிகளை வழங்கினார்.

உ.பி, ம.பி யை தொடர்ந்து குஜராத்திலும் புல்டோசர் கலாச்சாரம்: ராம நவமி வன்முறையாளர்களுக்குச் சொந்தமான இடங்கள் இடிப்பு

இந்த உரையாடலில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பல கருத்துக்கள் இடம்பெற்றன. அவற்றுள் முக்கியமானது, சிறைக்கு செல்லவேண்டிய ஆபத்து இருந்தாலும், தங்களை பாதுகாத்துக் கொள்ள, இஸ்லாமியர்களை உடல் ரீதியாகத் தாக்க இந்து சமூகம் அணிதிரட்டப்பட வேண்டும் என்பதாகும்.

இந்த உரை இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. மேலும் நரசிங்கானந்த் மதப் போரின் அடிப்படைவாத வார்த்தைகளில் பேசினார். அதற்கு தியாகம் தேவைப்படும். அதற்காக அவர் தனது உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

thanks : the wire

6. உங்கள் தாடியை இழுத்து சோடியா (சடைப் பின்னல்)செய்வோம்”- மயங்கேஷ்வர் சிங்

தேர்தலுக்கு முன்னதாக, கிழக்கு உத்தரபிரதேசத்தின் சித்தார்த் நகரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மயங்கேஷ்வர் சிங் ஒரு உரையை நிகழ்த்தினார். அப்போது தாங்கள் உயிர்பிழைத்து வாழ்வதற்காகவே இஸ்லாமியர்களை உடல் ரீதியாக காயப்படுத்தப் போவதாக அச்சுறுத்தினார்.

“ஹிந்துஸ்தானில் உள்ள இந்துக்கள் எழுந்தால் உங்கள் தாடியை இழுத்து சோட்டியாக (பின்னலாக) போட்டு விடுவார்கள். ஹிந்துஸ்தானில் வாழ வேண்டும் என்றால் ‘ராதே ராதே’ என்று சொல்ல வேண்டும். இல்லையேல் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு சென்றவர்கள் போல் நீங்களும் செல்லலாம்… உங்களால் இங்கு எந்த பயனும் இல்லை,” என்று அவர் கூறுவது காணொளியில் உள்ளது.

உத்தரபிரதேசம்: ‘உங்கள் சமூக பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன்’ – மசூதிக்கு முன்பு காவி உடை அணிந்த சாமியார் மிரட்டல்

7. மூன்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பஜ்ரங் தளம் நடத்திய ‘ஆயுதப் பயிற்சி முகாம்’

மே 5 அன்று, கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பஜ்ரங் தளம் ஏற்பாடு செய்த ‘ஆயுதப் பயிற்சி முகாம்’ சமூக ஊடகங்களில் வைரலானது, இளம் வயதினர் , ஏர்-கன்கள், திரிசூலங்கள் மற்றும் பிற ஆயுதங்களை வைத்திருப்பதை அவை காட்டின.

பாஜக தலைவர்கள் கே.ஜி. போபையா, அப்பச்சுரஞ்சன், சுஜா குஷாலப்பா ஆகியோர் மீது சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா புகார் அளித்ததை அடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும், வழக்கை விசாரிக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரி பின்னர் ஒரு ‘தண்டனை பதவியாக’ கர்நாடக லோக் ஆயுக்தாவுக்கு மாற்றப்பட்டார் – மாநிலத்தின் காவல்துறை வட்டாரங்களில் ஒரு இலாபகரமான பதவியாக அது கருதப்படுவதில்லை.

‘இந்தியாவுக்கு ஒரு இஸ்லாமியர் பிரதமராக வந்தால் 40% இந்துக்கள் கொல்லப்படுவர்’ – சாமியார் யதி நரசிங்கானந்த் மீண்டும் வன்முறை பேச்சு

8. எனக்கு வாக்களிக்காத இந்துக்களின் நரம்புகளில் மியான் (இஸ்லாமியர்கள்) ரத்தம் உள்ளது: ராகவேந்திர பிரதாப் சிங்

உத்தரபிரதேசத்தின் துமரியகஞ்ச் பகுதியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர், இஸ்லாமியர்களுக்கு எதிரான அறிக்கைகள் என்று வரும்போது, மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டப்படுபவர். அவர் இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதைக் காணும் காணொளி வைரலாக பரவியது. அதில் தனக்கு வாக்களிக்காத அனைத்து இந்துக்களையும் முஸ்லிம்கள் என்று குற்றம் சாட்டினார்.

அவர், “எனக்கு வாக்களிக்காத எந்த இந்துவின் நரம்பிலும் மியான் (இஸ்லாமியர்கள்) ரத்தம் இருக்கிறது. அவர் ஒரு துரோகி. ஜெய்சந்த் (பிரிவிதிவிராஜ்க்கு எதிராக போர் தொடுக்கக் கோரி அழைத்தவன்) என்ற நாய்க்குப் பிறந்தவன். அவன் தந்தைக்குப் பிறந்த பாவி மகன்… இந்த முறை நான் எச்சரிக்கிறேன்… இந்து மத துரோகிகள் அழிக்கப்படுவார்கள்.”

மேலும், “இஸ்லாமியர்களே கேளுங்கள், எந்த அளவு ஒரு இந்து இழிவுபடுத்தப்படுகிறானோ, நீங்கள் எந்த அளவு இந்துப் பெண்ணைப் பார்க்கிறீர்களோ, நான் உங்களை அந்த அளவு அடிப்பேன், அந்த அளவு வெட்டுவேன்…” என்று இஸ்லாமியர்களை மிரட்டுகிறார். அவரது எச்சரிக்கையின் பிற்பகுதி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கங்களுக்கு நடுவில் மறைந்து போனது.

டெல்லியில் நடைபெற்ற இந்து மகாபஞ்சாயத்து: இஸ்லாமிய பத்திரிக்கையாளர்களை ஜிகாதி என கூறியதோடு, 7 பத்திரிக்கையாளர்களை தாக்கிய வலதுசாரியினர்

கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்ட முந்தைய காணொளியில், “நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனதிலிருந்து, அவர்கள் (இஸ்லாமியர்கள்) தொப்பி அணிவதை நிறுத்திவிட்டார்கள். நீங்கள் மீண்டும் எனக்கு வாக்களித்தால், அவர்கள் திலகம் அணியத் தொடங்குவார்கள்,” என்று கூறியிருக்கிறார்.

2022 பிப்ரவரி 15 அன்று இந்தியா டிவியில், அவர் ஒரு இஸ்லாமியக் குழு உறுப்பினரை குறுக்கிட்டு, அவருக்கு எதிராக மத அவதூறுகளையும் தவறான வார்த்தைகளையும் அள்ளி வீசினார். குழு உறுப்பினருக்கு பன்றியின் பால் (இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும்) ஊட்டுவதாக அச்சுறுத்தினார். அவரை அவர் “நாய்க்குப் பிறந்தவன்” என்றும் “இந்துவிற்குப் பிறந்த முறைகேடான குழந்தை” என்றும் கூறினார்.

9. ‘யோகிக்கு வாக்களியுங்கள் அல்லது புல்டோசர்களை எதிர்கொள்ளுங்கள்’: டி.ராஜா சிங்

தெலுங்கானாவில் பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் டி.ராஜா சிங், இஸ்லாமியர்களுக்கு எதிரான அறிக்கைகளின் வரலாற்றை உருவாக்கியுள்ளார். அவர் தனது சமீபத்திய கருத்துக்களில், யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக வாக்களித்தவர்களை, எல்லாரும் அறிந்த “புல்டோசர்களைக்” கொண்டு அச்சுறுத்தினார், அவர்களை “துரோகிகள்” என்று குறிப்பிட்டார், இது முஸ்லிம்களைக் குறிக்கும் மற்றொரு பொதுவான குறியீட்டுப் பெயர்.

அவர், “ஆயிரக்கணக்கான புல்டோசர்கள் மற்றும் ஜேசிபிகளை உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வாங்கியுள்ளார். தேர்தலுக்குப் பிறகு, யோகிஜிக்கு எதிராக வாக்களித்தவர்களின் பகுதிகள் அடையாளம் காணப்படும். ஜேசிபிகள் மற்றும் புல்டோசர்கள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.

“யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை விரும்பாத உ.பி.யின் துரோகிகளுக்கு, நீங்கள் உ.பி.யில் நீடிக்க விரும்பினால், யோகி-யோகி என்று முழக்கமிட வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இல்லை என்றால் மாநிலத்தை விட்டு ஓட வேண்டி வரும்,” என்றார்.

thanks : the wire

10. குர்ஜார்: இறைச்சிக் கடைகளை மூடுவது, ‘அலி அல்ல’ முழக்கம்

ஜனவரி மாதம், வகுப்புவாத அறிக்கைகளை வெளியிட்டு பிரபலமடைந்த உத்தரபிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர் நந்த் கிஷோர் குர்ஜார், “அலி அல்ல, பாகுபலி அல்ல, பஜ்ரங் பலிதான்” என்ற முழக்கத்துடன் பிரச்சாரம் செய்தார். அதற்காக அவருக்கு அண்மையில் உத்தரப்பிரதேச தேர்தல்களின் போது தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியது.

பின்னணியாக, பிரிவினையின் போது லட்சக்கணக்கான இந்துக்களின் கொலைகளுக்கும், கற்பழிப்புகளுக்கும் ‘அலி’ முகமது அலி ஜின்னாதான் (1948 இல் இறந்தார்) காரணம் என்று கூறினார்.

குர்ஜார் லோனியில் இறைச்சிக் கடைகளை மூடுவதை ஆதரித்தார். இது ‘ராம ராஜ்ஜியத்தின்’ அவசியமான நிபந்தனையாக இருந்ததாகக் கூறினார். 2020 ஆம் ஆண்டில், “பக்ரீத் அன்று அப்பாவி விலங்குகளுக்கு பதிலாக உங்கள் குழந்தைகளை பலியிடுங்கள்,” என்று இஸ்லாமியர்களிடம் கூறினார் குர்ஜார். இறைச்சியால் கொரோனா வைரஸ் பரவுகிறது என்றார் அவர்.

இது பாஜகவுடன் தொடர்புடையவர்கள் செய்யும் ஒவ்வொரு வெறுப்பு பேச்சு அல்லது வன்முறைக்கான அழைப்பு, அல்லது வெறுப்பூட்டும் பேச்சில் ஈடுபடும் உறுப்பினர்களுக்கு கட்சி வழங்கிய கண்மூடித்தனமான மற்றும் மறைமுகமான ஊக்கம் மற்றும் வெறுப்பு குற்றச் சம்பவங்களின் விரிவான பட்டியல் அல்ல.

மேல்மட்ட தலைவர்கள் தூண்டி விடும் செயல்கள் இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை. 2008-ம் ஆண்டின் மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா தாக்கூர் போன்ற நபர்களின் ஏற்றுக்கொள்ளலை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. பாபர் மசூதி இடிப்பு (இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பை உலுக்கிய குற்றம் என்று உச்ச நீதிமன்றத்தால் வர்ணிக்கப்பட்டது) மற்றும் அதன் முதுகில் கட்டப்பட்ட அரசியல் பலகைகளை பெருமைப்படுத்துவதையும், பாஜக தலைவர்கள் இன்றும் பெருமையுடன் ஒப்புக்கொள்வதையும் கணக்கில் கொள்ளவில்லை. அவர்கள் அதை இடிப்பதில் கலந்து கொண்டனர்.

ஹரித்வார் வெறுப்புப் பேச்சு வழக்கில் முதல் கைது: காவல்துறையினருக்கு சாபம்விட்ட யதி நரசிம்மானந்த்

நுபுர் ஷர்மா விளிம்புநிலை உறுப்பினரா?

நுபுர் ஷர்மா பாஜக வீட்டிற்குள் ஒரு “விளிம்புநிலை” உறுப்பினர் என்றால், அவர் ஒரு ஊடுருவலா அல்லது அவர் அழைக்கப்பட்டாரா?

ஒரு வாரத்திற்கு முன்பு அவர் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் ஆதரவைப் பற்றி பெருமையாகக் கூறினார். அவரது அறிக்கைகள், ஒன்றிய அரசு கூறுவது போல், விளிம்புநிலைக்கு உட்பட்டவையாக இருந்தால், பாஜக இப்போது இந்த விளிம்பை பிரதிநிதித்துவப்படுத்தும், செயல்படுத்தும் மற்றும் அதிகரிக்கும் கட்சி என்ற உண்மையுடன் சமரசம் செய்து கொள்ளலாம். பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலையும், பேச்சு வார்த்தைகளையும் தயக்கமின்றி ஆதரிக்கும் ஒரு கட்சி – உலகம் அதை அப்படியே நடத்தும் என்ற உண்மையுடன் இப்போது சமரசம் செய்து கொள்ள வேண்டும்.

www.thewire .in இணையதளத்தில் நவோமி பார்டன் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்

மொழிபெயர்ப்பு : நாராயணன்

அம்பேத்கருக்கு எதிராக கலவரம் செய்த சாதிவெறியர்கள் | Amalapuram Ambedkar Issue

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: கடந்த ஓராண்டில் பாஜக தலைவர்கள் பேசிய இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களின் விரிவான பட்டியல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்