Aran Sei

பெட்ரோல் விலை உயர்வுக்கு முந்தைய ஆட்சியே காரணம் – நரேந்திர மோடி

முந்தைய ஆட்சியாளர்கள், எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை நம்பியிருக்கும் நிலையை உருவாக்காமல் இருந்திருந்தால், தற்போது மத்திய தர வர்க்கத்தினர் இந்த துன்பத்தை எதிர்கொண்டிருக்க மாட்டார்கள் என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை, அதிகபட்சமா 100 ரூபாயை தொட்டுள்ள நிலையில், பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் 100 ரூபாயை தொட்ட பெட்ரோல் விலை – அனைத்து நகரங்களிலும் புதிய உச்சத்தில் எரிவாயு விலை

தமிழகத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை காணொளி மூலம் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட மற்றும் திறன்படைத்த நாடு எரிசக்திக்கு, இறக்குமதியை சார்ந்திருக்க முடியுமா?” என்று பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நான் யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், இதுகுறித்து முன்கூட்டியே கவனம் செலுத்தியிருந்தால், மத்தியதர வர்க்கத்தினர் இதுபோன்ற பிரச்சனையை சந்தித்திருக்க மாட்டார்கள் என்று கூற விரும்புகிறேன்” என கூறிய பிரதமர் “எங்களுடைய அரசு, மத்தியதர வர்க்கத்தினரின் பிரச்சனை குறித்து கவனம் செலுத்துகிறது. அதனால் தான் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனளிக்கும் வகையில், எதனால் மீது கவனத்தை அதிகரித்துள்ளோம்” என்றும் கூறியுள்ளார்.

’கார்ப்பரேட்களுக்கு சலுகைகள்; மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு’: பாஜக அரசின் இரட்டை நிலை – கே. பாலகிருஷ்ணன் விமர்சனம்

இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்புத் திறன் மேலும் அதிகரிக்கப்படும் என்று கூறிய நரேந்திர மோடி, வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கட்டமைப்புகளை இந்திய நிறுவனங்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் என்றும் தெரித்துள்ளார்.

இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் 27 நாடுகளில், 2.7 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளதாகவும் பிரமர் கூறியுள்ளார்.

இயற்கை எரிவாயுவிற்கான ஜிஎஸ்டி வரியை 6.3 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பிரதமர், இதன் மூலம் வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு வரிகள் விதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, தொடர் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலையேற்றம்: ’கொரோனாவே காரணம்’ – மத்திய அமைச்சர் விளக்கம்

முன்னதாக, ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையிலான எரிவாயு குழாய் இணைப்பு, மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் புதிய சுத்திகரிப்பு அலகு (Desulphurisation Unit) ஆகியவற்றை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர், நாகப்பட்டினத்தில் அமையவுள்ள, காவிரிப் படுகை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

Source: PTI

பெட்ரோல் விலை உயர்வுக்கு முந்தைய ஆட்சியே காரணம் – நரேந்திர மோடி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்