தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், 2021 – 2022 ஆம் நிதி ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை, தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சரும் துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் இன்று (பிப்ரவரி 23) தாக்கல் செய்தார்.
கடந்த நிதி ஆண்டில் 1.09 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இது எதிர்பார்த்த வருவாயை விட, 23,561 கோடி குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை, 96,889 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், நடப்பு நிதி ஆண்டில் 1.35 லட்சம் கோரி வரி வருவாய் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலை குறைந்தால் “ராமரும் மகிழ்ச்சியடைவார்” – சிவசேனா கருத்து
கொரோனா தொற்று காரணமாக, சுகாதார திட்டங்களுக்கு அதிகம் செலவிடப்பட்டதால், கடந்த நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 21,617 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்ட நிலையில், அது 65,994 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மாநிலத்தின் மொத்த உற்பத்தி (SGDP) 23.42 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்ட நிலையில், அது 19.43 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், மத்திய வரிவருவாயிலிருந்து தமிழகத்திற்கு 32,849 கோடிய ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 23,039 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
” பெட்ரோல் விலை மாநிலங்களுடன் முடிவு, சோசலிசம் இறக்குமதி சித்தாந்தம் ” – நிர்மலா சீதாராமன்
மத்திய அரசு, மாநிலத்திற்கு கொடுக்க வேண்டிய வரி வருவாயின் பங்கு, கொரேனாவை காரணம் காட்டி குறைக்கப்பட்டதாலும், மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய வரிவருவாய் தொகுப்பு (Divisible Pool) சுருக்கப்பட்டதாலும், மத்திய அரசின் வரிகளில், செஸ் மற்றும் கூடுதல் கட்டண (Surcharge) வரி உயர்த்தப்பட்டதாலும், மாநிலத்தின் வரி வருவாய் குறைந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அனுமதிக்கப்பட்ட நிகர கடனின் அளவு 85,454 கோடியாக உள்ள நிலையில், நடப்பு நதியாண்டில் தமிழகத்தின் நிகர கடன் 84,686 கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 31 ஆம் தேதி வரையில் தமிழகத்தின் மொத்த கடன் 4.85 லட்சம் கோடியாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு மொத்த கடனின் அளவு 5.7 லட்சம் கோடியாக உயரும் என்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.