Aran Sei

பெட்ரோல் விலை குறைந்தால் “ராமரும் மகிழ்ச்சியடைவார்” – சிவசேனா கருத்து

ராமர் கோவிலுக்கு நிதி வசூலிப்பதற்கு பதிலாக, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று, பிரதமர் நரேந்திர மோடியை சிவசேனா விமர்சித்துள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

“வாழும் உரிமை அனைத்து மக்களுக்கும் உள்ளது, ஆகவே அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அரசின் கடமை. ஒருவேளை அரசு அதன் கடமையை மறந்திருந்தால், அதை நியாபகப்படுத்த வேண்டியது மக்களின் கடமை. ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக, உச்சத்தை தொட்டு வரும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும். அப்போதுதான், ராமரும் மகிழ்ச்சியடைவார்.” என்று சம்னா பத்திரிகையின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையுயர்வு: ‘சாமானியர்களின் பாக்கெட்டை காலி செய்து, நண்பர்களின் பாக்கெட்டை நிரப்பும் மோடி அரசு’ – ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், காங்கிரஸ் கட்சி பதவி விலக வேண்டும் என்று கூறியதை நினைவுபடுத்தியுள்ள சாம்னா, “மோடி அரசை இப்போது அதுபோல் யாரும் கூறினால், அவர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்” என்றும் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் அரசு, எண்ணெய் வளத்தை தேடுவதற்காக இந்தியன் ஆயில், ஓஎன்ஜிசி, பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பல பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியதாக தெரிவித்துள்ள சாம்னா “மோடி அரசு தற்போது அந்த பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் விற்றுக்கொண்டிருப்பதுடன், பெட்ரோல் விலை உயர்விற்கு முந்தைய அரசின் மீது பழியும் சுமத்துகிறது” என்று தெரிவித்துள்ளது.

‘ரத்து செய்யப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி; தேவையில்லாமல் கட்டப்படும் புதிய நாடாளுமன்றம்’ – சுப்ரியா சுலே குற்றச்சாட்டு

“2014ஆம் ஆண்டுக்கு முன்னர் அமித்தாப் பச்சன், அக்ஷய் குமார் சமூக வலைளதளங்களில் பெட்ரோல் விலை உயர்வை பற்றி பேசினர். தற்போ, பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்த பிறகும், அனைத்து பிரபலங்களும் மௌனம் காக்கிறார்கள். அவர்கள் மௌனமாக்கப்பட்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர், கருத்தை வெளியிடவும், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டவும் சுதந்திரம் இருந்ததையே இது காட்டுகிறது. யாரும் தேசதுரோக வழக்கில் சிறைக்கு அனுப்பப்படவில்லை. இன்று, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கோபத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை இழந்துள்ளோம். ஆகவே, அமிதாப் பச்சனையும், அக்ஷய் குமாரையும் நொந்து என்ன பயன்?” என்று சம்னா பத்திரிகையில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை குறைந்தால் “ராமரும் மகிழ்ச்சியடைவார்” – சிவசேனா கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்