Aran Sei

காஷ்மீரில் மீண்டும் வெளிநாட்டு பிரதிநிதிகள் – பிராந்திய கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் திட்டம் இல்லை

காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து ஆராய்வதற்காக, ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த, 24 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழு காஷ்மீர் வந்துள்ளனர்.

வெளிநாட்டு தூதர்களும் அடங்கியுள்ள அந்த குழுவினர் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரநிதிநிதிகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசவுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டதுடன், காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, இதுவரை இரண்டு முறை ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதிகள் காஷ்மீரில் வந்துள்ளனர்.

வீட்டு சிறையில் காஷ்மீர் தலைவர்கள்: ‘இதுதான் உங்கள் புதிய மாடல் ஜனநாயகம்’ – உமர் அப்துல்லா விமர்சனம்

தற்போது, மூன்றாவது முறையாக ஸ்ரீநகர் வந்துள்ள ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதிகள், இம்முறை, ஸ்ரீநகருக்கு வெளியிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், அப்போது மத்திய காஷ்மீரின், மகம் பகுதியில் உள்ள அரசு கல்லூரி மாணவர்களை சந்திக்கவுள்ளதாகவும் தி இந்து கூறுகிறது.

சமீபத்தில், மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகளையும் அவர்கள் சந்திக்க உள்ளதாகவும் ஆனால், காஷ்மீரின் முக்கிய பிராந்திய கட்சிகளின் தலைவர்களை அவர்கள் சந்திக்கப்போவதில்லை என்றும், அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பிரதிநிதிகள் வருவதையொட்டி, ஸ்ரீநகரின் சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ பங்கர்கள், செவ்வாய்கிழமையன்று (பிப்ரவரி 16) அகற்றப்பட்டுள்ளன. / நன்றி: தி இந்து

 

ஐரோப்பிய யூனியனுக்கான இந்தியாவின் தூதரான உகோ ஆஸ்டுடோ தலைமையில் காஷ்மீர் வந்துள்ள குழுவில், சிலி, பிரேசில், கியூபா, பொலிவியா, எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சுகல், பெல்ஜியம், ஸ்பெயின், ஸ்வீடன், இத்தாலி, பங்களாதேஷ், மலாவி, எரித்ரியா, கோட் டி அய்வர், கானா, செனகல், மலேசியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரநிதிகளும் இடம்பெற்றுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி எல்லைகளில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக, வெளிநாட்டை சேர்ந்த பிரபலங்கள் கருத்து தெரிவித்தது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயல் என்று, இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் – நாடாளுமன்றத்தில் அமித் ஷா வாக்குறுதி

இந்நிலையில், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதத்தில் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதீன் ஒவைசி, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கருத்தை குறிப்பிட்ட பேசும்போது, விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாட்டவர்கள் கருத்து தெரிவிப்பதை விமர்சித்துள்ள அரசு, காஷ்மீருக்கு வெளிநாட்டு பிரநிதிகளை அழைத்துச் செல்வது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

காஷ்மீரில் மீண்டும் வெளிநாட்டு பிரதிநிதிகள் – பிராந்திய கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் திட்டம் இல்லை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்