Aran Sei

ஒன்றரை லட்சம் டிராக்டர்கள் அணிவகுப்பிற்குத் தயார் – அடுத்ததாக நாடாளுமன்ற முற்றுகைக்குத் திட்டம்

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்துவோம் என்று அறிவித்து, அரசுக்கு நெருக்கடி கொடுத்த விவசாயிகள், அடுத்ததாக நாடாளுமன்ற முற்றுகைக்கு திட்டமிட்டுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் டெல்லி எல்லைகளில், தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுக்கும், அரசுக்கு இடையில் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், விவசாய சட்டங்களை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்ற, விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்க தயாராக இல்லாததால், பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.

தலையில் சுமைகளுடன் போராட்ட களத்தில் திரளும் பெண்கள் – விவசாயிகள் போராட்டத்தின் மற்றொரு மையமாகும் மும்பை

இதற்கிடையில், குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பு நடத்துவோம் என்று விவசாயிகள் அறிவித்து, அதற்கான ஏற்பாட்டையும் மிகப்பெரிய அளவில் செய்துள்ளனர். அந்தவகையில், இன்று, டெல்லி ராஜபாதையில் அரசு நடத்தும் குடியரசு தின அணிவகுப்பிற்குப் பிறகு, டெல்லி சாலைகளில், விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக, நேற்று (25.01.21) செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்கத் தலைவர்கள், குடியரசு தின அணிவகுப்பில் ஒன்றரை லட்சம் டிராக்டர்கள் கலந்துகொள்ளும் என்று தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

டிராக்டர்களுக்கு டீசல் தர மறுக்கும் பங்க்குகள் – விவசாயிகள் பேரணியைத் தடுக்க உ.பி., அரசு சூழச்சி

தி இந்து -விடம் பேசிய கிராந்திகாரி கிசான் சங்கத்தின் தலைவர் தஷ்ன் பால் “இந்த உற்சாகத்தை, குறிப்பாக இளைஞர்களிடம் இந்த உற்சாகத்தை பார்க்கும்போது, எங்களுடைய அடுத்த கட்ட திட்டத்தை அறிவிப்பதாக முடிவு செய்துள்ளோம். பிப்ரவரி 1 ஆம் தேதி, பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பல்வேறு பகுதிகளிலிருந்து, நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தவுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

வெறும் கால்களில் இந்த பேரணி நடக்கும் என்றும், இது வெறும் தொடக்கம்தான் என்றும் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் பல்பீர் சிங்க ராஜேவால் தெரிவித்துள்ளதாக தி இந்து கூறுகிறது.

ஒன்றரை லட்சம் டிராக்டர்கள் அணிவகுப்பிற்குத் தயார் – அடுத்ததாக நாடாளுமன்ற முற்றுகைக்குத் திட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்